திருச்சி ஜாக்டோ பேட்டி
வியாழன், 30 ஜூலை, 2015
ஞாயிறு, 26 ஜூலை, 2015
ஆசிரியர்களே...! முன்னேற்ற சங்க முன்னோடிகளே...!!.......சிறு சிறு சல சலப்புகளுக்கும் புலம்பல்களுக்கும் இடம் கொடாமல்....ஆகஸ்டு ஒன்று ஜாக்டோ சென்னை உண்ணாவிரத தொடர் முழக்க ஆர்பாட்டத்தில் அணிவகுப்போம்...!!!
நாம் தொடர் போராட்டங்களால் தளர்ந்து போகும் வீரியமற்ற வித்துகளில்லை...
போராட்டத்தை வாழ்க்கையாய் ஏற்ற வாழ்வியல் வழிகாட்டிகளாக
வலம் வருவோர் ....என்பதை
குதர்க்க கண்களுக்கு உறுத்தலாய் அமைவோம்....
ஜாக்டோ போராட்டத்தில் நமது அணித்திரட்சி....அரசுக்கு மட்டுமல்ல
சில மடமையாளர்களுக்கு பதிலாய் இருக்கட்டும்.....
அணிதிரள்வோம்...! சென்னையை தமதாக்கிட பாதையமைப்போம்...!!
அடுத்தக்கட்ட நகர்வில் நமது இருப்பு அவசியம் என்பதை எல்லோர்க்கும் உணர்த்துவோம்...!!!
புதன், 22 ஜூலை, 2015
மாறுதல் கலந்தாய்வு அரசாணையில் திருத்தம் செய்ய வலியுறுத்தி ஆசிரியர் முன்னேற்ற சங்கம் ஆர்பாட்டம்
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் இந்த கல்வியாண்டு
வெளியிடப்பட்டுள்ள கலந்தாய்வு அரசாணையில் திருத்தம் வெளியிட வலியுறுத்தி முதல் கட்டமாக வேலூர் , கிருஷ்ணகிரி, தருமபுரி,சேலம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை , சிவகங்கை , இராமநாதபுரம், மதுரை திருநெல்வேலி , கரூர் ஆகிய மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்கள் முன்பு ஆர்பாட்டம் நடைபெற்றது இதர மாவட்டங்களில் ஜூலை 24 மற்றும் 26 தேதிகளில் நடைபெறுகிறது
இந்த ஆர்பாட்டத்தில் கீழ்கண்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
தற்போது வெளியிடப்பட்டுள்ள ஆசிரியர்
இடமாறுதல் அரசாணை - 232 ல் திருத்தங்கள் செய்திட
வலியுறுத்தி கோசங்கள் எழுப்பப்பட்டது
கலந்தாய்விற்கு முன்னதாக மாணவர் ஆசிரியர் பள்ளியின் நலன் கருதியும் தேவையின்
அடிப்படையிலும் நிர்வாக மாறுதல் வழங்கலாம்
என்று கூறப்பட்டுள்ளதன் மூலம் முறைகேடுகளுக்கு இடம் கொடுக்கும் வகையிலும் வெளிப்படைத்தன்மைக்கு
குந்தகமாகவும் அமையும் என்பதால் இதனை
அரசாணையில் இருந்து நீக்கி நேர்மையான கலந்தாய்வை நடத்திட வேண்டும்.
மூன்றாண்டுகள் ஒரே பள்ளியில் பணி புரிந்தவர்கள் மட்டுமே மாறுதல் கலந்தாய்வில்
கலந்துகொள்ள முடியும் என்பதை கடந்த ஆண்டுகளில் பின்பற்றியவாறு ஓராண்டாக மாற்றிட வேண்டும்
.
மே மாதம் நடத்தப்பட வேண்டிய பணி நிரவல் என்பது தற்போது நடத்தப்பட இருப்பதாக
அறிவித்திருப்பதன் மூலம் ஆசிரியர் பணிபுரியு
ம் பள்ளி மாணவர்கள் கற்பதில் குழப்பம் ஏற்படுவதோடு ஆசிரியர்களின் குழந்தைகள் குடுப்பத்தாரின் கல்விநிலை மற்றும் இருப்பிட வசதி ஆகியவை நெருக்கடிக்கு உள்ளாகும் சூழல் உள்ளதையும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும் என்பாதை கருத்திற்கொண்டு இந்தாண்டு பணி நிரவல் கலந்தாய்வை ரத்து செய்திட வேண்டும்.
பட்டதாரி ஆசிரியர்களுக்கு இந்த ஆண்டு கலந்தாய்வை நடத்திட வேண்டும்
இந்தாண்டு அலகு விட்டு அலகு மாறுதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக
குறிப்பிடப்பட்டுள்ளது இதனை திரும்ப பெற்று இந்த ஆண்டு அலகு விட்டு அலகு மாறுதலை
நடைமுறை படுத்தவேண்டும்
ஆண்பாலர் மற்றும் பெண்பாலர் பள்ளிகளில் ஆசிரியர்களின் நியமனம் மற்றும் மாறுதல்
சார்ந்து தெளிவான நிலையை அரசு எடுக்க வேண்டும்.
என்று கோரிக்கை விடுக்கப்பட்டது
சனி, 18 ஜூலை, 2015
வியாழன், 16 ஜூலை, 2015
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் - பணியிட மாற்ற வழிகாட்டுதல் அரசாணையை திருத்தி வெளியிட வலியுறுத்தி 22 /07/2015 அன்று மாலை 5 மணிக்கு அனைத்து முதன்மைக்கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
தற்போது வெளியிடப்பட்டுள்ள பணியிட மாற்ற வழிகாட்டுதல் அரசாணையை திருத்தி வெளியிட வலியுறுத்தி 22 /07/2015 அன்று மாலை 5 மணிக்கு அனைத்து முதன்மைக்கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது .
இந்நிகழ்வில் அனைத்து மாநில மாவட்ட வட்டார நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறது . மேலும் இந்நிகழ்வில் அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்கும் வகையில் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டுமாய் அனைத்து பொறுப்பாளர்களையும் கேட்டுகொள்கிறோம்.
மாநில அமைப்பு
இந்நிகழ்வில் அனைத்து மாநில மாவட்ட வட்டார நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறது . மேலும் இந்நிகழ்வில் அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்கும் வகையில் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டுமாய் அனைத்து பொறுப்பாளர்களையும் கேட்டுகொள்கிறோம்.
மாநில அமைப்பு
செவ்வாய், 14 ஜூலை, 2015
கலந்தாய்வு அரசாணை - மறுபரிசீலனை மாநிலத்தலைவர் அறிக்கை
பள்ளிக்கல்வித்துறை அரசு பொதுமாறுதல் குறித்த நெறிமுறைகள் அரசாணை எண் 232 நாள் 10-07-2015 வெளியிட்டுள்ளது .இதில் வெளியிடப்பட்டுள்ள பல நெறிமுறைகள் ஆசிரியர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது எனில் அது மிகையாகாது.இந்த ஆண்டு முறையான நேர்மையான ஒளிவுமறைவற்ற கலந்தாய்வு நடைபெறுமா எனும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது
• முதலாவதாக இந்த ஆண்டு கலந்தாய்வு நெறிமுறைகளில் பத்தி 1(3)ல் நூதனமான முறையில்
“கலந்தாய்வுக்கு முன்னர் மானவர்களின் நலன் கருதியும் ஆசிரியர்களின் நலன் கருதியும் பள்ளியின் நலம் கருதியும் தேவையின் அடிப்படையில் நிர்வாக மாறுதல் வழங்கப்படவேண்டும் “ என குறிப்பிடப்பட்டுள்ளது .
பெரும்பான்மையான பணியிடங்களையும் நிர்வாக மாறுதல் அடிப்படையாக நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது .கடந்த காலங்களில் வெளியிடப்பட்ட நெறிமுறைகளில் இந்த வாக்கியங்கள் இல்லாமலே பல்வேறு இடங்கள் நிர்வாக மாறுதல் முறையில் நிரப்பப்பட்டன .தற்போது நேரடியாகவே இவ்வாறு நெறிமுறை வழங்கப்பட்டிருப்பதால் பெரும்பான்மையான பணியிடங்களுமே நிர்வாக மாறுதல் முறையில் நிரப்பப்படுமோ எனும் ஐயமும் இதனால் ஊழல் தலைவிரித்தாடுமோ முறையாக நடைபெறுமோ எனும் சந்தேகம் எழுந்துள்ளது .
• உடனடியாக இந்த நிர்வாக மாறுதல் தொடர்பான பத்தி 1(3) ஐ முழுமையாக நீக்க வேண்டும்.
• கலந்தாய்வு ஆன்லைன் முறையிலா அல்லது எவ்விதம் நடைபெற இருக்கிறது என தெளிவாக குறிப்பிடப்படவில்லை .
* தமிழக ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சீரிய முயற்சியால் பெறப்பட்ட அலகு விட்டு அலகு மாறுதல் முற்றிலுமாக இந்த கல்வி ஆண்டு நிறுத்தப்பட்டிருக்கிறது . பட்டதாரி ஆசிரியர்கள் அலகுவிட்டு அலகு மாறும் முறை ( unit transfer ) ஆண்டுதோறும் ஆசிரியர் தேர்வு வாரிய எண் அடிப்படையில் நடத்தப்பட வேண்டும்
• பொதுமாறுதல் ஓராண்டு பணிக்காலம் முடித்தவர்களுக்கு எனும் முந்தைய நிலையை மாற்றி மூன்றாண்டுகள் நிறைவடைந்தால் தான் மாறுதல் என தன்னிச்சையாக ஆசிரியர் சங்கங்கள் ஆசிரியர்கள் கருத்தை கேட்காமல் நெறிமுறை வெளியிட்டிருப்பது வருந்தத்தக்கது.
• பள்ளிக்கல்வித்துறை இவ்வாண்டு பட்டதாரி ஆசிரியர்கள் பொது மாறுதல் பணிநிரவல் முடிந்த பின்பே செய்யப்படவேண்டும் என நடைமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது ,இந்த பணிநிரவல் மேமாதமே செய்யப்பட்டிருந்தால் ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அவர்களது கல்வி பாதிக்காதவகையில் பள்ளியில் சேர்த்திருக்க இயலும் , தற்போது பணிநிரவல் செய்யப்பட்டால் அது ஆசிரியர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவதோடு அவர்களது குழந்தைகளின் கல்வித்தரத்தையும் பாதிக்கும் என்பதால் இவ்வாண்டு பணிநிரவல் நடவடிக்கையை முழுமையாக கைவிட வேண்டும் .
• ஆசிரியர்கள் மீது எந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் எவ்வித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெளிவு படுத்தியபின்பே அவர்களை நிர்வாக மாறுதல் செய்யவேண்டும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
பிரபலமான இடுகைகள்
-
இந்த கல்வி ஆண்டுக்கான உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கான பதவி உயர்வு முன்னுரிமை பட்டியலில் இடம் பெற்றுள்ள ஆசிரியர்களின் விபரத்தை கீழ்க்கண்...
-
நாள்:14-7-2009 இடம்:திருவையாறு நேரம்:மாலை 5 மணி வரவேற்பு : திரு.பூபதி திருவையாறு ஒன்றியச் செயலாளர் கூட்டத் தலைமை : திரு.ராமராஜ் திருவையாறு ஒ...
-
* தொகுப்பூதிய காலத்தை பணிக்காலமாக்கி மாண்பு மிகு தமிழக முதல்வர் ஆணை இட வேண்டுதல். *பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை முழுவதுமாக மத்திய மாநில அரச...
-
தற்போது வெளியிடப்பட்டுள்ள பணியிட மாற்ற வழிகாட்டுதல் அரசாணையை திருத்தி வெளியிட வலியுறுத்தி 22 /07/2015 அன்று மாலை 5 மணிக்கு அனைத்து முதன்...