புதன், 1 ஆகஸ்ட், 2012

குடியிருப்பு பகுதிகளில் செல்போன் டவரால் பாதிப்பு உண்டாகும் - அறிக்கை

புதுடெல்லி: குடியிருப்பு மற்றும் பொது இடங்களில் இருந்து செல்போன் டவர்களை நிறுவுவதை தடுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி, மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.கிழக்கு டெல்லியைச் சேர்ந்தவர் ஏ.எஸ்.ஜெயின். இவர் தனது வக்கீல் சுக்ரீவ் துபே மூலம், உயர் நீதிமன்றத்தில் தாக் கல் செய்துள்ள வழக்கில் கூறியிருப்பதாவது:குடியிருப்பு பகுதிகளில் செல்போன் டவர்களை நிறுவுவதால் அதில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சால் பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். இந்த கதிர்வீச்சால் ‘கிளோமா’ என்ற மூளையைதாக்கும் புற்றுநோய் ஏற்படுகிறது. இதனால் மூளை பெரிதாகி, இறப்பு ஏற்படுகிறது. இதுதவிர பல்வேறு நோய்களுக்கும் கதிர்வீச்சு காரணமாக அமைகிறது.செல்போன் டவரில் இருந்து 50 மீட்டர் தொலைவுக்குள் வசிப்பவர்களுக்கு அதிகளவில் பாதிப்பு ஏற்படுகிறது. ஆனால், செல்போன் டவரை நிறுவும்போது, அதுகுறித்த பாதிப்புகள் குறித்து கட்டிடத்தின் உரிமையாளரிடம் கூட தெரிவிப்பதில்லை. மக்கள் தங்களுக்கு தெரியாமலேயே கதிர்வீச்சால் பாதிக்கப்படுகின்றனர். 

உலக சுகாதார மையத்தின் ஆய்வறிக்கையிலும், செல்போன் டவர் கதிர்வீச்சு பாதிப் பால் புற்றுநோய் ஏற்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால், டெல்லியில் சர்வசாதாரணமாக செல்போன் டவர்கள் நிறுவப்படுகின்றன. இதனால் குடியிருப்பு மற்றும் பொது இடங்களில் செல்போன் டவர்களை நிறுவ தடை விதிக்க வேண்டும். மேலும், இதுதொடர்பான உத்தரவுகளை பிறப்பிக்கக் கோரி பிரதமர் தலைமையிலான மாநில அமைச்சர்கள் குழுவுக்கு உத்தரவிட வேண்டும்.வெளிநாடுகளில் செல்போன் டவர்களில் இருந்து கதிர்வீச்சு பாதிப்புகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு வழக்கில் கூறப்பட்டுள்ளது.பொறுப்பு தலைமை நீதிபதி ஏ.கே.சிக்ரி, நீதிபதி ராஜிவ் சஹாய் எண்ட்லா ஆகியோர் முன்னிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதைத் தொடர்ந்து மத்திய அரசின் தொலைத் தொடர்புத்துறை, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், மாநில அரசு ஆகியவை வரும் 9ம் தேதிக்குள் தங்கள் பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்