ஞாயிறு, 11 நவம்பர், 2012

புதிதாக 1,591 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்



அரசு மேல்நிலைப் பள்ளிகளில் புதிதாக 1,591 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உருவாக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
பள்ளிகளின் தரம் உயர்த்தப்படுவதாலோ, மாணவ, மாணவியர்களுக்கு கல்வி கற்க பல சலுகைகள் வழங்குவதாலோ மட்டும் தரமான கல்வியை மாணவ, மாணவியர்களுக்கு அளிக்க இயலாது; தேவைக்கு ஏற்ப ஆசிரியர்களும் இருக்கவேண்டும்  என்பதனை கருத்தில் கொண்டு தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளுக்காக  1,591 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை  தோற்றுவிக்க முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.  அதனடிப்படையில் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த நியமனத்தின் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு 63 கோடியே 94 லட்ச ரூபாய் கூடுதலாக செலவாகும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், 4,393 பள்ளிகளுக்கு ஆய்வக உடனாள் நியமிக்கவும் முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.  இதே போல், 1,764 பள்ளிகளில் இளநிலை உதவியாளர்களை நியமிக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.  131 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த 152 கோடியே 73 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்தும் முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள  செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்