கந்தர்வகோட்டை டிசம்பர் – 24
தமிழகத்தில் புதிதாக
இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களை நியமித்த தமிழக முதல்வருக்கு நன்றி
தெரிவித்தல்,
பள்ளிக்கல்வித்துறையின்
தொடக்கக்கல்வி அலகு மற்றும் பள்ளிக்கல்வி அலகில் புதிய நியமனங்களுக்கு முன்னதாக வெளி
மாவட்டங்களில் மாறுதல் பெற வாய்ப்பின்றி பல ஆண்டுகளாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு
வாய்ப்பளிக்கும் வகையில் கலந்தாய்வு நடத்திட தமிழக அரசை கேட்டுக்கொள்ளுதல்,
பொது மாறுதல் வழிகாட்டு நெறிமுறைகளில் அலகு விட்டு அலகு மாறுதல் குறித்த
அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தும் இது நாள் வரை
கலந்தாய்வு நடத்தப்படவில்லை என்பதை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு வருவது,
தன் பங்களிப்பு ஓய்வூதிய
திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறை படுத்த தமிழக அரசை
வேண்டுதல்.
அனைவருக்கும்
இடைநிலைக்கல்வித்திட்டம் மூலம் அனைத்து நடுநிலைப்பள்ளிகளும் உயர்நிலைப்பள்ளிகளாக ஈர்ப்பு
செய்யப்பட இருப்பதால் பள்ளிக்கல்விதுறையின் அனைத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கும்
பொதுவான பதவி உயர்வு முன்னுரிமை பட்டியல் வெளியிட வேண்டுதல்.
தொகுப்பூதியத்தில் பணியாற்றிய
காலத்தை முழுப் பணிக்காலமாக கருதி ஆணை வெளியிட வேண்டுதல் உள்ளிட்ட தீர்மானங்கள்
நிறைவேற்ற பட்டன. இதில்,மாவட்ட அமைப்பு செயலர் எம்.முத்துக்குமார்,சட்ட ஆலோசகர் எ.ராஜா,
மாநில செயற்குழு உறுப்பினர் த.ராமமூர்த்தி வட்டார துணை செயலர் ப. ரமேஷ் குமார்,
வட்டார நிர்வாகிகள் ம.முருகன், எஸ்.சேகர்,கே.பழனிசாமி,எம்.கண்ணன்,கே.சோமசுந்தரம்
ஆகியோர் கலந்து கொண்டனர்
முன்னதாக வட்டார செயலாளர் எஸ்.ராஜேந்திரன்
வரவேற்றார்.இறுதியாக வட்டாரப்பொருளாளர் வி.சீனியப்பா நன்றி கூறினார்.
இந்நிகழ்வு சார்ந்த பத்திரிக்கை செய்திகள்
இந்நிகழ்வு சார்ந்த பத்திரிக்கை செய்திகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக