கரூர் தினகரன் கரூர், : அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் கோபிநாத் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் நித்தியானந்தன் வரவேற்றார். மாவட்ட துணைத்தலைவர் பிச்சைமுத்து, மகளிரணி அபிராமி, துணைச் செயலாளர் கார்த்திக்கேயன் உட்பட பலர் பேசினர். மாநில பொதுச் செயலாளர் ராஜ்குமார் கலந்து கொண்டு கோரிக்கை குறித்து பேசினார். பிற சார்பு சங்க நிர்வாகிகளான மாசிலாமணி, திருநாவுக்கரசு, செல்வதுரை, திருமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கரூர் மாவட்டத்தில் காலியாக உள்ள டேடா என்ட்ரி ஆபரேட்டர், எம்ஐஎஸ் கோ ஆர்டினேட்டர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை முறைப்படுத்திட வேண்டும். அனைவருக்கும் கல்வி இயக்க பணிகள் தவிர்த்து, கல்வித்துறை சார்ந்த அலுவலகப் பணிகள் செய்யுமாறு நிர்ப்பந்திப்பதை தவிர்க்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
|
ஞாயிறு, 15 பிப்ரவரி, 2015
புதிய ஓய்வூதிய திட்டம் ரத்துகோரி பட்டதாரி ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பிரபலமான இடுகைகள்
-
நாள்:14-7- 20 09 இடம்:கும்பகோணம் நேரம்:மாலை 5 மணி வரவேற்பு : ஆர்.ரமேஷ் கும்பகோணம் ஒன்றியச் செயலாளர் கூட்டத் தலைமை : ஜி.துரைக்கண்ணு கும்பகோணம...
-
’அலகு விட்டு அலகு மாறுதல்’ பெற உரிய ஆணை வழங்கிய மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும், மாண்புமிகு தமிழக துணை முதல்வர் அவர்களுக்கும், மாண்ப...
-
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க புதிய வட்டாரக்கிளை நிர்வாகிகள் தேர்வு மற்றும் செயற்குழுக்கூட்டம...
-
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக