கடந்த செப்டெம்பர் மாதம் 25 மற்றும் 26 தேதிகளில், சென்னையில் அலகுவிட்டு அலகு மாறுதலுக்கான கலந்தாய்வு, சைதாப்பேட்டை, அசோக்நகர் மற்றும் எழும்பூர் ஆகிய இடங்களில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
எழும்பூரில் தொடக்கக் கல்வித் துறையிலிருந்து பள்ளிக் கல்வித்துறைக்கு மாற விண்ணப்பித்திருந்த ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு பனிமாறுதலுக்கான ஆணைகளை வழங்கி, சிறப்புரையாற்றிய நம் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள் தமிழக அரசு பள்ளி மற்றும் மாணவர்களின் தரம் உயர எடுத்துவரும் நடவடிக்கைகளை பட்டியலிட்டார்.
மாண்பு மிகு தமிழக முதல்வர், டாக்டர். கலைஞர் அவர்கள் ஆசிரியர்களின் பால் கொண்டுள்ள அன்பால் அவர்களின் நலனில் என்றென்றும் அக்கறை கொண்டுள்ளதையும் அதன் காரணமாகவே தொடக்கக் கல்வித் துறையிலிருந்து பள்ளிக் கல்வித் துறைக்கு மாறுவதற்கு ஆசிரியர்களிடமிருந்து கோரிக்கை எழுந்தவுடன் பரிசீலித்து நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் அவர்கள் உத்தரவிட்டதன் பேரில் இப்பொழுது இக்கலந்தாய்வு நடைபெறுவதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் நமது மாநிலத் தலைவர் திரு. கு. தியாகராஜன் அவர்கள் அலகு விட்டு அலகு மாறுதல் வழங்கிட தமிழக அரசினை தொடர்ந்து பல்வேறு சூழ்நிலைகளில் வலியுறுத்தி வந்ததையும் நினைவு கூர்ந்து பாராட்டினார். அப்பொழுது நம் மாநிலத் தலைவர் அவர்களும் மேடையில் அமர்ந்திருந்தார்.
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தினுடைய செயல்பாடுகளையும் வாழ்த்திப் பேசிய அமைச்சர் அவர்கள் தொடக்கக் கல்வித் துறையில் இக்கலந்தாய்வின் காரணமாக உண்டாகும் காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப் படும் என்றும் உறுதி தெரிவித்தார்.
இந்த அலகு விட்டு அலகு மாறுதல் மூலமாக பள்ளிக் கல்வித்துறைக்கு மாற நியமன ஆணைகளை பெற்றுச் சென்ற அனைத்து ஆசிரியர்களும் ஆனந்தத்தால்
நமது மாநிலத் தலைவர் அவர்களையும் , நமது சங்கத்தின் மாநில, மாவட்ட ஒன்றிய பொறுப்பாளர்களையும் பாராட்டி இப்போதும் தொடர்ந்து நன்றி தெரிவத்த படியே இருப்பதன் மூலமாக, நம் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் எத்தகைய வரலாற்று சாதனையை புரிந்திருக்கிறது என்பதை கண்கூடாக தெரிதுகொள்ளலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக