சனி, 28 டிசம்பர், 2013

நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு 25 சதவீதம் பதவி உயர்வு அளிக்க கோரிக்கை

நமது மாநிலத்தலைவர் நேற்று பள்ளிக்கல்வி இயக்குனருக்கு மனு 
நேரடி முதுகலை ஆசிரியர் நியமனத்தில் கடைபிடிக்கப்படும், 50 சதவீதத்தில், 25 சதவீதத்தை, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கி, பதவி உயர்வு செய்ய வேண்டும்' என, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம், வலியுறுத்தி உள்ளது. சங்க தலைவர், தியாகராஜன், பள்ளி கல்வி இயக்குனருக்கு அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: தொடக்க கல்வித் துறையின் கீழ், நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியரில், முதுகலை ஆசிரியர் தகுதி வாய்ந்தவர்களுக்கு, கடைசி வரை, பதவி உயர்வே கிடையாது. பள்ளி கல்வித் துறையில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர் மட்டும், கல்வி தகுதிக்கு ஏற்ப, பதவி உயர்வு பெற முடிகிறது. தற்போது, முதுகலை ஆசிரியர் காலி இடங்களில், 50 சதவீதம், பதவி உயர்வு மூலமும், 50 சதவீதம், நேரடி நியமனம் மூலமும் நிரப்பப்படுகின்றன. இதில், நேரடி நியமனத்திற்கான, 50 சதவீத இடங்களில், 25 சதவீதத்தை, நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒதுக்கி, பதவி உயர்வு வழங்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறியுள்ளார்.

தியாகராஜன் கூறியதாவது: முதுகலை ஆசிரியர் பணிக்கு தகுதி வாய்ந்தவர்கள், பட்டதாரி ஆசிரியர் பணிக்கும், தகுதியானவராக இருக்கின்றனர். எனவே, இரு தேர்வுகளிலும், அவர்கள் பங்கேற்கலாம். பட்டதாரி ஆசிரியர், அதிகளவில் தேர்வு செய்யப்படுவதால், அவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு உள்ளது. ஆனால், எங்களுக்கு, முதுகலை ஆசிரியர் பதவி உயர்வைத் தவிர, வேறு வாய்ப்பு இல்லை. எனவே, எங்களுக்கு, 25 சதவீதம் பதவி உயர்வு வழங்குவதால், யாருக்கும் பாதிப்பு ஏற்படாது, என்றார்.
Click Here
நன்றி : தினமலர் http://www.dinamalar.com/news_detail.asp?id=882957&Print=1


சென்னை : அனை வருக்கும் கல்வி இயக்க வட்டார வள மையங்களில் பணியாற்றும் 47 மேற்பார்வையாளர்கள், 17 ஆசிரியர் பயிற்றுநர்களும் மேல்நிலை பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர்களாக  மாறுதல் செய்யப்பட உள்ளனர். மேலும், 1.1.13 தேதியில் வெளியிடப்பட்ட தகுதி வாய்ந்தோர் முன்னுரிமைப் பட்டியலில்  இடம் பெற்றுள்ள பட்டதாரி ஆசிரியர்கள் 897 பேருக்கு பதவி உயர்வு இன்று பதவி உயர்வு வழங்கப்படுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க தலைவர் தியாகராஜன் கூறியதாவது: தொடக்கப் பள்ளிகளில் கடந்த 2004-2005ம் ஆண்டு முதல் 23,000 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால் அவர்களுக்கு இதுவரை பதவி உயர்வு என்பதே வழங்கப்படவில்லை. 

இவர்களில் உயர்நிலை பள்ளிகளில் நியமிக்கப்பட்டவர்கள், ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கி வருகின்றனர். ஆனால் தொடக்க பள்ளிகளில் நியமிக்கப்படும் பட்டதாரிகளுக்கு பதவி உயர்வே வழங்கப்படாத நிலை உள்ளது. இதை தவிர்க்க, நேரடி நியமனங்கள் செய்யும் போது, 50 சதவீதத்தில் 25 சதவீதம் பேரை தொடக்க பள்ளி பட்டதாரிகளில் இருந்து எடுத்து பதவி உயர்வு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்று நடக்க உள்ள கவுன்சலிங்கில் எங்களுக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும்.

நன்றி :தினகரன் http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=73345

பிரபலமான இடுகைகள்