புதன், 31 மார்ச், 2010

பாராட்டுக்கள்


       நமது மாநில ஒருங்கிணைப்பாளரும் வெட்டுவாக்கோட்டை அரசு மேனிலைப்பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியருமான திரு.ஆ.மணிகண்டன் அவர்கள் , அண்மையில் INTEL நிறுவனத்தினால் நடத்தப்பட்ட 'கல்வியில் தொழிட்நுட்பம்' தொடர்பான போட்டி ஒன்றில் கலந்து கொண்டு, அவர் சமர்ப்பித்த ஆய்வு மாநில அளவில் சிறந்ததாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
      சென்னையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் மணிகண்டன் அவர்களுக்கு கேடயம் மற்றும் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. விழாவில் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் திரு.குற்றாலிங்கம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். INTEL INDIAவின் இயக்குநர் அவர்களும் கலந்து கொண்டார். பரிசினை SSA இயக்குநர் வழங்கினார்.

ஞாயிறு, 28 மார்ச், 2010

D.A உயர்வு-27% -------->35%

        மாண்புமிகு தமிழக முதல்வரின் உத்தரவு-அரசு ஊழியர்களுக்கு 8% அகவிலைப்படி உயர்வு. ஆசிரியர்கள் அனைவரையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது. ஆசிரியர்கள் அனைவரின் சார்பிலும் இவ்வரசின் சீரிய நிர்வாகத்திற்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

செவ்வாய், 9 மார்ச், 2010

கும்பகோணம் ஒ.து.செயலாளர் திருமணம்

     தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஒன்றிய து.செயலாளர் திரு. பழனியப்பன் அவர்களின் திருமண விபரம் கீழே உள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்கம் தனது வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்துக் கொள்கிறது.

சனி, 6 மார்ச், 2010

அலகு விட்டு அலகு மாறுதலில் சென்றிருக்கும் என் இனிய ஆசிரிய பெருமக்களுக்கு வாழ்த்துக்கள்

தொடக்கக்கல்வி அலகிலிருந்து உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பணியாற்றும் தாங்களின் மன நிலை சற்றே தடுமாற்றத்துடன் இருப்பதை நாம் நன்கு அறிவோம் . இருந்தும் உங்களது பிரச்சினைகளை நன்கு அறிந்த நமது இயக்கம், அதற்கான முற்போக்கு நடவடிக்கைகளில் தற்போது இறங்கியுள்ளது .
நம்மோடு பணி ஏற்ற சக ஆசிரியர் பதவி உயர்வில் சென்ற இடத்தில் கூட சிலர் அலகு விட்டு அலகு மாறுதலில் சென்றதோடு அங்குள்ள புது நியமன ஆசிரியர்களுக்கு இளையோறாய் வைக்கப்படுகிறோமே! என்று வேதனை படும் என் தோழா கவலை வேண்டாம் இயக்கம் இருக்கிறது. அதை வளர்க்கும் பணியை நீ செய் இயக்கம் உன்னை பார்த்துக்கொள்ளும் .
என்றும் உங்கள் பணியில் ,
மணிகண்டன்.ஆ
மாநில ஒருங்கிணப்பாளர்
தமிழ் நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்

பிரபலமான இடுகைகள்