திங்கள், 31 டிசம்பர், 2012

12, 10-ம்வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு


12ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 1ந்தேதி தொடங்கி 27ந்தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 27ந்தேதி தொடங்கி ஏப்ரல் 12-ந் தேதி நடைபெறும்.
பத்தாம் வகுப்பு தேர்வு அட்டவணை
மார்ச் 27 : தமிழ் முதல் தாள்
மார்ச் 28 : தமிழ் 2ம் தாள்
ஏப்ரல் 1 : ஆங்கிலம் முதல் தாள்
ஏப்ரல் 2 : ஆங்கிலம் 2ம் தாள்
ஏப்ரல் 5 : கணிதம்
ஏப்ரல் 8 : ஆறிவியல்
ஏப்ரல் 12 : சமூக அறிவியல்
12 ம் வகுப்பு தேர்வு அட்டவணை :
மார்ச் 1 : தமிழ் முதல் தாள்
மார்ச் 4 : தமிழ் 2ம் தாள்
மார்ச் 6 : ஆங்கிலம் முதல் தாள்
மார்ச் 7 : ஆங்கிலம் 2ம் தாள்
மார்ச் 11 : இயற்பியல் , பொருளாதாரம்
மார்ச் 14 : கணிதம், விலங்கியல், மைக்ரோ பயாலஜி, நியூட்ரிசன்ஸ் & டையடிக்ஸ்
மார்ச் 15 : வணிகவியல், ஹோம் சயின்ஸ், புவியியல்
மார்ச் 18 : வேதியியல், அக்கவுண்டன்ஸி,
மார்ச் 21 : உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிக கணக்கு ( Business Maths )
மார்ச் 25 : Communicative English, இந்திய கலாச்சாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், உயிர் வேதியியல், டைப் ரைட்டிங் ( தமிழ் & ஆங்கிலம்), Advanced Langugae
மார்ச் 27 : Nursing, அரசியல் அறிவியல், புள்ளியியல்

ஞாயிறு, 23 டிசம்பர், 2012

பள்ளிக்கல்வித்துறையின் புதிய நியமனங்களுக்கு முன்னதாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்திட வேண்டும் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க செயற்குழுவில் தீர்மானம்


கந்தர்வகோட்டை  டிசம்பர் – 24
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் ஆசிரியர் முன்னேற்ற சங்க செயற்குழு வட்டாரத்தலைவர் மாரிமுத்து தலைமையில் நடைபெற்றது.இதில் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் A.மணிகண்டன், மாவட்டத்தலைவர் C.முத்துசாமி,மாவட்ட செயலர் M.பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்த செயற்குழுவில் வட்டார துணை செயலர் J.சந்திரசேகரன் பின் வரும் தீர்மானங்களை முன்மொழிந்தார்.
      தமிழகத்தில் புதிதாக இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களை நியமித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தல்,
      பள்ளிக்கல்வித்துறையின் தொடக்கக்கல்வி அலகு மற்றும் பள்ளிக்கல்வி அலகில்  புதிய நியமனங்களுக்கு முன்னதாக வெளி மாவட்டங்களில் மாறுதல் பெற வாய்ப்பின்றி பல ஆண்டுகளாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் கலந்தாய்வு நடத்திட தமிழக அரசை கேட்டுக்கொள்ளுதல்,
       பொது மாறுதல் வழிகாட்டு நெறிமுறைகளில் அலகு விட்டு அலகு மாறுதல் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தும் இது நாள் வரை  கலந்தாய்வு நடத்தப்படவில்லை என்பதை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு வருவது,
     தன் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறை படுத்த தமிழக அரசை வேண்டுதல்.
      அனைவருக்கும் இடைநிலைக்கல்வித்திட்டம் மூலம் அனைத்து நடுநிலைப்பள்ளிகளும் உயர்நிலைப்பள்ளிகளாக  ஈர்ப்பு செய்யப்பட இருப்பதால் பள்ளிக்கல்விதுறையின் அனைத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கும் பொதுவான பதவி உயர்வு முன்னுரிமை பட்டியல் வெளியிட வேண்டுதல்.
   தொகுப்பூதியத்தில் பணியாற்றிய காலத்தை முழுப் பணிக்காலமாக கருதி ஆணை வெளியிட வேண்டுதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்ற பட்டன. இதில்,மாவட்ட அமைப்பு செயலர் எம்.முத்துக்குமார்,சட்ட ஆலோசகர் எ.ராஜா, மாநில செயற்குழு உறுப்பினர் த.ராமமூர்த்தி வட்டார துணை செயலர் ப. ரமேஷ் குமார், வட்டார நிர்வாகிகள் ம.முருகன், எஸ்.சேகர்,கே.பழனிசாமி,எம்.கண்ணன்,கே.சோமசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்
    முன்னதாக வட்டார செயலாளர் எஸ்.ராஜேந்திரன் வரவேற்றார்.இறுதியாக வட்டாரப்பொருளாளர் வி.சீனியப்பா நன்றி கூறினார்.

இந்நிகழ்வு சார்ந்த பத்திரிக்கை செய்திகள்






சனி, 22 டிசம்பர், 2012

பத்தாம் வகுப்பு பொது தேர்வில், அரசு பள்ளிகள் தேர்ச்சி அதிகரிக்க, ஆறாம் வகுப்பிலிருந்தே மாணவர்களை தயார்படுத்த வேண்டும் ராமநாதபுரத்தில் நடந்த தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சியில்இடைநிலை கல்வி திட்ட இணை இயக்குனர் நரேஷ் பேச்சு

"தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில், அரசு பள்ளிகள் தேர்ச்சி அதிகரிக்க, ஆறாம் வகுப்பிலிருந்தே மாணவர்களை தயார்படுத்த வேண்டும்'', என அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்ட இணை இயக்குனர் நரேஷ் பேசினார். ராமநாதபுரத்தில் நடந்த தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சியில், அவர் பேசியதாவது: ஒவ்வொரு பள்ளியிலும், பத்தாம் வகுப்பில் மட்டும், மாணவர்களை தேர்ச்சிக்கு தயார்படுத்தினால் சாதிக்க முடியாது. ஆறாம் வகுப்பிலிருந்தே, மாணவர்களை படிப்பில் சிறந்து விளங்க தயார் செய்ய வேண்டும். இதற்காக ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்களை ஒருங்கிணைத்து கூட்டம் நடத்தி, தேர்ச்சி விகிதத்தை படிப்படியாக உயர்த்த வேண்டும். தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் இடையே தகவல் தொடர்பு இல்லாவிட்டால், சாதிப்பது கடினம். முதல்வர் ஜெ., கல்வி துறையின் மீது தனி கவனம் செலுத்தி வருகிறார். எனவே அரசு பள்ளி ஆசிரியர்கள், பொது தேர்வில் மாணவர்களை அதிக மதிப்பெண் எடுக்க வைப்பதுடன், நூறு சதவீத தேர்ச்சிக்கு முயற்சி எடுக்க வேண்டும். ஒரு பள்ளியில் 90 சதவீதம் வெற்றி என்றால், அங்கு, 10 சதவீத தோல்விக்கு, தலைமை ஆசிரியர் பொறுப்பேற்க வேண்டும். எனவே நூறு சதவீதம் என்பதை சவாலாக எடுத்து, மாணவர்களுக்கு கற்றுத்தர வேண்டும், என்றார்.

திங்கள், 17 டிசம்பர், 2012

தமிழ்நாடு அரசின் பல்மருத்துவம் குறித்த விளக்க பவர் பாயின்ட்

இந்த இணைப்பு மூலம் தமிழ்நாடு அரசின் பல்மருத்துவம் பற்றிய அடிப்படை தகவல்கள் ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த விளக்கம் இந்த இணைப்பிலுள்ள பவர் பாயிண்ட் மூலம் அறியலாம்  http://tamsview.wordpress.com/?attachment_id=128

பிரபலமான இடுகைகள்