திங்கள், 3 ஆகஸ்ட், 2015

கலந்தாய்வு குழப்படி



நாம் கண்டன போராட்டம் அறிவித்து அதனை மாநிலத்தின் எல்லாமாவட்டங்களிலும் நடத்தினோம்.....இதனைத்தொடர்ந்து இந்தியப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு போன்ற அமைப்புகளும் இதற்காக போராட்டம் அறிவித்து நடத்தின....இது சார்ந்து அரசின் பிரித்தாளும் கொள்கையின் ஒரு பகுதி என்று மீன்தேரை கதைகளை முன்வைத்து வாட்சப் முகநூல் போன்றவற்றில் இந்தபோராட்டம் தேவையற்றது என்று இந்த நிகழ்வை எதிர்க்க இயலாத சில புல்லுருவிகள் விமர்சித்தன........ஆனால் அரசாணையில் சிறுதிருத்தம் வரப்போகிறது என்று தெரிந்தவுடன் தமது போராட்டம்....அறிக்கைக்கு...கிடைத்த வெற்றி என்றெல்லாம் தம்பட்டம் அடித்துக்கொண்டனர் சில முன்னோடிகள்...
இது இப்படியிருக்க ஏற்கனவே போட்ட அரசாணையில் மூன்றாண்டு என்பதை மட்டும் ஓராண்டாக மட்டுமே மாற்றப்பட்டடுள்ளது......
உண்மையில் மிகவும் சிக்கலான உட்கூறுகள் களையப்படவில்லை
கலந்தாய்வுக்கு முன்னதாக நிர்வாகமாறுதல்.....
உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணிமாறுதல் கலந்தாய்வில் முட்டுக்கட்டை....
பட்டதாரி ஆசிரியர்களுக்கு தாமதமான பணிநிரவல் கலந்தாய்வு.......
நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களை பொருத்தவரை இடைநிலை ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வு முடிந்தபின்னரே என்று அறிவிக்கப்பட்டிருப்பது......
கண்டிக்கத்தக்கது என்பதை எப்போது உணர்வோம்.....
"போராடுவோம் ....துதிபாடிகளை துரத்துவோம்.....!! உண்மையான போராட்டங்களை முன்னெடுப்போம்"

பிரபலமான இடுகைகள்