செவ்வாய், 30 அக்டோபர், 2012

நவம்பர் 1 மழை காரணமாக விடுமுறை

மழை காரணமாக விடுமுறை புதுக்கோட்டை,தஞ்சாவூர்,திருவாரூர்,நாகப்பட்டினம்,கடலூர்,சென்னை,காஞ்சிபுரம்,அரியலூர்,பெரம்பலூர்,திருவண்ணாமலை,விழுப்புரம்,திருவள்ளூர்,சென்னை,கரூர்,வேலூர்  உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நவம்பர் 1/2012   விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 23 அக்டோபர், 2012

ஆசிரியர் தகுதி மறுதேர்வுக்கான சரியான விடைகள் இணையதளத்தில் வெளியீடு


ஆசிரியர் தகுதி மறுதேர்வு முதல் தாள் மற்றும் இரண்டாம் தாளுக்கான சரியான விடைகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டன.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in  என்ற இணையதளத்தில் இந்த விடைகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த விடைகளில் ஏதேனும் ஆட்சேபம் இருந்தால் அதற்குரிய ஆவணங்களுடன் எழுத்துப்பூர்வமாக ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் சமர்ப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 26) மாலை 5.30 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விடைகள் தொடர்பான ஆட்சேபங்களை தேர்வர்கள் சமர்ப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. சிறுபான்மை மொழிப்பாடங்களுக்கான சரியான விடைகள் மேற்கண்ட இணையதளத்தில் திங்கள்கிழமை (அக்டோபர் 22) வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடைகள் தொடர்பான ஆட்சேபங்களை trb.tnnic.in என்ற இ-மெயில் முகவரியிலும் அனுப்பலாம்.
ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய சுமார் 6 லட்சம் பேரின் விடைத்தாள்கள் ஸ்கேன் செய்து முடிக்கப்பட்டுள்ளன.  ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை விரைவாக வெளியிடுவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஆட்சேபங்களைப் பெற்றவுடன் அவற்றை நிபுணர் குழு கொண்டு ஆய்வு செய்து சரியான விடைகள் இறுதிசெய்யப்படும்.  அதனடிப்படையில் ஆசிரியர் தகுதி மறுதேர்வு விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியல் நாளை வெளியீடு:  மாநிலம் முழுவதும் 2,895  முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர் பணியிடங்களுக்காக கடந்த மே மாதம் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வு விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்ய வேண்டும் எனறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனடிப்படையில், அனைத்து விடைத்தாள்களும் மறுமதிப்பீடு செய்யப்பட்டு மதிப்பெண்களும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இதையடுத்து, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வுப் பட்டியல் திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
பதிவிறக்கம் செய்ய இங்கே சுட்டவும்

கல்விக்கடன் பெற தடையின்மை சான்று தேவையில்லை


மாணவர்கள் கல்விக்கடனுக்காக, பிற வங்கிகளில் தடையின்மைச் சான்று வாங்கி வருமாறு வற்புறுத்தக் கூடாது என வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
தேசியமயமாக்கப்பட்ட, தனியார் வங்கிகளில் கல்விக்கடன் வழங்க நிதி அமைச்சரகம் வலியிறுத்தி வருகிறது. அனைத்துப் படிப்புகளுக்கும், கல்விக் கடன் திட்டம் விரிவு படுத்தப்பட்டுள்ளது.
கல்விக்கடன் கேட்கும் மாணவர்கள் விண்ணப்பம், உரிய ஆவணங்களுடன், அவர்கள் கடன் வாங்க முன்வரும் அனைத்து நகரங்களில் உள்ள வங்கிகளிலும், இதற்கு முன் கடன் வாங்கவில்லை. மற்ற கடன்களிலும், நிலுவை இல்லை என்ற தடையின்மைச் சான்றை, மேலாளர்களிடம் பெற்று, ஆவணங்களுடன் இணைக்க வேண்டும். ஆனால் இச்சான்றை பெற, மாணவர்கள் போராட வேண்டி உள்ளது.
இப்பிரச்னையைத் தீர்க்க, வரும் காலங்களில், கல்விக்கடன் கேட்கும் மாணவர்களிடம், தடையின்மைச் சான்று பெறத் தேவையில்லை. மாறாக, எந்த வங்கியிலும், கடனும், நிலுவையும் இல்லை என பெற்றோர் உறுதிமொழிச்சான்று கொடுத்தால், அதை ஆதாரமாக வைத்து, கல்விக்கடன் வழங்க வேண்டும் என, அனைத்து வங்கிகளுக்கும், ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
நன்றி 
தினமணி 

வியாழன், 18 அக்டோபர், 2012

பள்ளி சார் தகவல்களை இணையதளத்தில் வெளியிட பள்ளிகளின் புள்ளிவிவரம் சேகரிப்பு


 தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் உள்ள, உள் கட்டமைப்பு வசதிகள், மாணவ, மாணவியர் எண்ணிக்கை, ஆசிரியர் எண்ணிக்கை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் குறித்து கணக்கெடுப்பு நடந்து வருகிறது. இந்த கணக்கெடுப்பு பணியை, வரும் நவம்பர் இறுதிக்குள் முடிக்க உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம், அரசு பள்ளிகளில் உள்ள உண்மையான நிலவரம் தெரிந்து விடும்.

தமிழகத்தில், அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என, மொத்தம், 55 ஆயிரத்து 667 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில், 5.49 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்; 1.35 கோடி மாணவ, மாணவியர், படித்து வருகின்றனர். அனைத்துப் பள்ளிகள், அவற்றின் உள் கட்டமைப்பு வசதிகள், மாணவ, மாணவியர் எண்ணிக்கை, ஆசிரியர் விவரம் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை திரட்டி, அவை, பள்ளிக் கல்வி இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.
இந்த விவரங்களின் அடிப்படையில், தேவையான வசதிகளை ஏற்படுத்தவும், புதிய திட்டங்களை தீட்டவும், பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பு பணியை, ஆண்டுதோறும் நடத்த, திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, அனைத்து வகை பள்ளிகளுக்கும், 32 பக்கங்கள் அடங்கிய படிவங்கள் வினியோகிக்கப்பட்டுள்ளன.
ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு, எஸ்.எஸ்.ஏ., திட்ட இயக்ககத்தின் சார்பிலும், இதர வகுப்புகளுக்கு, மத்திய இடைநிலை கல்வித்திட்டம் சார்பிலும், விண்ணப்ப படிவங்கள் வினியோகிக்கப்பட்டுள்ளன. விண்ணப்ப படிவத்தில், தவறான தகவல்கள் இடம் பெற்றிருந்தால், அதற்கு, சம்பந்தபட்ட தலைமை ஆசிரியரே பொறுப்பேற்க வேண்டும்.
மேலும், இனசுழற்சி என்ற அடிப்படையில், பல்வேறு இன மாணவர்கள் பங்கேற்கும் நடைமுறை விவரம், ஒப்பந்த ஆசிரியர் எண்ணிக்கை, அவர்களைப் பற்றிய விவரங்கள், பள்ளியின் உள் கட்டமைப்பு வசதிகள் உட்பட, பல்வேறு தகவல்கள் கேட்கப்பட்டுள்ளன.

10ம் வகுப்பு செய்முறை பயிற்சி தனித்தேர்வர் பதிவு செய்ய 31ம் தேதி வரை அவகாசம்










2012 -13 கல்வியாண்டில் எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு, தனித் தேர்வர்களாக எழுதுவோர்   அறிவி யல் பாடத்திற்கான செய் முறை தேர்வு எழுத வேண் டும். இதற்கான பயிற்சி வகுப்பில் பங்கேற்க பதிவு செய்ய கடைசி தேதி கடந்த செப்டம்பர் 27 என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பதிவு செய்யும் தேதியை நீட்டிக்க கோரி பலர் விண்ணப்பித்துள்ளனர். 
இதையடுத்து செய்முறை பயிற்சி வகுப்பிற்கு பதிவு செய்ய வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்யாத தனித்தேர்வர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனித் தேர்வர்கள்  கீழ்க்கண்ட இணைப்பு மூலம்  விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்களை இர ண்டு நகல்களில் பூர்த்தி செய்து, தொடர்புடைய மாவட்டக் கல்வி அலுவலகங்களில் வரும் 31ம் தேதிக்குள் நேரடியாக ஒப்படைக்க வேண்டும். இது குறித்து மேலும் விபரங்களுக்கு மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தை தொடர்பு கொள் ளவும். 

application download here


பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பதற்கான புதிய வழிமுறையை பின்பற்ற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க புதிய வழிமுறை: தமிழக அரசு
பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பதற்கான புதிய வழிமுறையை பின்பற்ற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் "வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் என்று தமிழக அரசு திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வுக்குப் பிறகு நேர்முகத் தேர்வு அல்லது மீண்டும் போட்டித் தேர்வு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புதிய முறையாக "வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையை தமிழக அரசு அறிமுகப்படுத்துகிறது.

ஆசிரியர் தகுதி மறுதேர்வு வரும் 14-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசின் இந்த உத்தரவு மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு பிளஸ் 2, இளநிலைப் பட்டம், ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் "வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்கப்படும். அதேபோல், இடைநிலை ஆசிரியர்களுக்கு பிளஸ் 2, ஆசிரியர் பட்டயப் படிப்பு, ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் "வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்கப்படும்.

இடைநிலை ஆசிரியர் நியமனத்தைப் பொருத்தவரை உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கு நிலுவையில் இருக்கும் வரை, ஆசிரியர் தகுதித் தேர்வுக்குப் பிறகு மாநில அளவிலான பதிவு மூப்பு முறை பின்பற்றப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் 5,451 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள், 18,922 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தகுதித் தேர்வின் மூலம் நிரப்ப தமிழக அரசு முடிவு செய்தது.

அதனடிப்படையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் மாநில பதிவு மூப்பின் அடிப்படையிலும், ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனமும் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்தது.

இந்த நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்தத் தேர்வு வெறும் தகுதித் தேர்வு மட்டுமே. ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்க புதிய நடைமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதுதொடர்பாக அரசுக்குப் பரிந்துரைக்க உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது. தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி தலைமையிலான இந்தக் குழுவில் பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் சுர்ஜித் கே.சௌத்ரி, பள்ளிக் கல்வி இயக்குநர் கே.தேவராஜன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

பல்வேறு மாநிலங்களில் பின்பற்றப்படும் ஆசிரியர் தேர்வு நடைமுறையை ஆராய்ந்த பிறகு இந்தக் குழு அரசுக்குப் பரிந்துரை அனுப்பியது.

அந்தப் பரிந்துரையை ஏற்று தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதன் விவரம்:
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு அவர்கள் ஏற்கெனவே பெற்ற மதிப்பெண் அடிப்படையில் 100 மதிப்பெண் "வெயிட்டேஜ்' மதிப்பெண்ணாக வழங்கப்படும்.

பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 15 மதிப்பெண்ணும், ஆசிரியர் பட்டயத் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 25 மதிப்பெண்ணும், ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 60 மதிப்பெண்ணும் "வெயிட்டேஜ்' மதிப்பெண்ணாக வழங்கப்படும்.
மொத்தம் 100 மதிப்பெண்ணுக்கு இவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் (உச்ச நீதிமன்ற வழக்கு முடியும்வரை ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படும்).

பட்டதாரி ஆசிரியர்களுக்கு...ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 10 மதிப்பெண்ணும், இளநிலைப் பட்டம், பி.எட். பட்டங்களில் பெற்ற மதிப்பெண்ணுக்கு தலா 15 மதிப்பெண்ணும், ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 60 மதிப்பெண்ணும் "வெயிட்டேஜ்' மதிப்பெண்ணாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

கடந்த ஜூலை 12-ல் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வை 6.60 லட்சம் பேர் எழுதினர். இவர்களில் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.

இந்தத் தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கவும், 22 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்கவும் அக்டோபர் 14-ம் தேதி ஆசிரியர் தகுதி மறுதேர்வு நடத்தப்படுகிறது.
இந்தத் தேர்வில் மொத்தம் 6.70 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர்.

வெயிட்டேஜ் மதிப்பெண் பகிர்வு எப்படி?

இடைநிலை ஆசிரியர்களுக்கான "சிறப்புச்சேர்க்கை' மதிப்பெண் (100):
பிளஸ் 2 தேர்வுக்கு வழங்கப்படும் மதிப்பெண் (15):
90 சதவீதத்துக்கு மேல் ..................- 15 மதிப்பெண்
80 முதல் 90 சதவீதம் வரை.............-12
70 முதல் 80 சதவீதம் வரை.............- 9
60 முதல் 70 சதவீதம் வரை.............- 6
50 முதல் 60 சதவீதம் வரை.............- 3
ஆசிரியர் பட்டயத் தேர்வுக்கு வழங்கப்படும் மதிப்பெண் (25)
70 சதவீதத்துக்கு மேல்..................- 25 மதிப்பெண்
50 முதல் 70 சதவீதம் வரை............- 20
ஆசிரியர் தகுதித் தேர்வு (60)
90 சதவீதத்துக்கும் மேல்................- 60 மதிப்பெண்
80 முதல் 90 சதவீதம் வரை............- 54
70 முதல் 80 சதவீதம் வரை............- 48
60 முதல் 70 சதவீதம் வரை............- 42
பட்டதாரி ஆசிரியர்களுக்கான "சிறப்பு சேர்க்கை' மதிப்பெண் (100):
பிளஸ் 2 தேர்வுக்கு வழங்கப்படும் மதிப்பெண் (10)
90 சதவீதத்துக்கு மேல்..................- 10 மதிப்பெண்
80 முதல் 90 சதவீதம் வரை............- 8
70 முதல் 80 சதவீதம் வரை............- 6
60 முதல் 70 சதவீதம் வரை............- 4
50 முதல் 60 சதவீதம் வரை............- 2
இளநிலைப் பட்டப் படிப்பு (15)
70 சதவீதத்துக்கும் மேல்................- 15
50 முதல் 70 சதவீதம் வரை............- 12
50 சதவீதத்துக்கும் கீழே................- 10
பி.எட். படிப்பு (15)
70 சதவீதத்துக்கும் மேல்................- 15
50 முதல் 70 சதவீதம் வரை............- 12
ஆசிரியர் தகுதித் தேர்வு (60)
90 சதவீதத்துக்கும் மேல்................- 60 மதிப்பெண்
80 முதல் 90 சதவீதம் வரை............- 54
70 முதல் 80 சதவீதம் வரை............- 48
60 முதல் 70 சதவீதம் வரை............- 42

அரசு உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்தோர் முன்னுரிமைப்பட்டியலில் 967 முதல் 1398 முடிய உள்ள430 ஆசிரியர்களுக்கு 19.10.2012 மற்றும் 20.10.2012 ஆகிய தேதிகளில் online மூலம் கலந்தாய்வு



1.1.2012 ன் படி 2012-13 ம் கல்வியாண்டிற்கான  அரசு உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்தோர் முன்னுரிமைப்பட்டியலில்  967 முதல்  1398 முடிய உள்ள430 ஆசிரியர்களுக்கு  online மூலம் கலந்தாய்வு 19.10.2012 மற்றும் 20.10.2012 அன்று நடைபெற உள்ளது. கலந்தாய்வில் இம்முன்னுரிமையில் உள்ள ஆசிரியர்கள் பதவி உயர்வினை உரிமைவிடல் செய்வதால் ஏற்படக்கூடிய உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் அதனையொத்த பணியிடங்களும் நிரப்பப்படவேண்டும் என்ற அடிப்படையில் அன்றே 1399 முதல்1466 முடிய பட்டியலில் உள்ள ஆசிரியர்கள் அழைக்கப்படுகின்றனர் இருப்பினும் காலிப்பணியிடம் இருக்கும் வரை மட்டுமே பதவி உயர்வு ஆணைகள் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
19.10.2012                           
காலை 9.00 மணி முதல் பிற்பகல் 12.30 வரை   
முன்னுரிமை பட்டியல் வரிசை எண். 967 முதல் 1116 வரை
(150 ஆசிரியர்கள் மட்டும் )         
 பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை   
முன்னுரிமை பட்டியல் வரிசை எண்.1117 முதல் 1216 வரை
(100 ஆசிரியர்கள் மட்டும்)          
20.10.2012                                    
காலை 9.00 மணி முதல் பிற்பகல் 12.30 வரை   
முன்னுரிமை பட்டியல் வரிசை எண். 1217 முதல் 1366 வரை 
150 ஆசிரியர்கள் மட்டும்)         
 பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை   
முன்னுரிமை பட்டியல் வரிசை எண். 1367 முதல் 1466 வரை 
100 ஆசிரியர்கள் மட்டும்)   

வெள்ளி, 5 அக்டோபர், 2012

தமிழ் நாடு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அரசாணை வெளியீடு

தமிழ்நாடு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு ஏழு சதவீத அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது

இதனைத்தொடந்து கடந்த ஜூலை 2012 மாதம் முதல் கணக்கிட்டு நிலுவைத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது  அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.   அரசாணை நிலை எண்: 362 நாள் :05-10-2012

மேலும் இதனை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக்கவும் :

http://tamsview.files.wordpress.com/2012/10/sedu_t_5_20121.pdf

புதன், 3 அக்டோபர், 2012

தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட 26,000 பணி நியமனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. நியமனத்துக்கு வகை செய்யும் ஏப்ரல் 30 தேதியிட்ட பணி நியமன அரசாணை எண் 72 ரத்து செய்யப்பட்டுள்ளது

மதுரை பாப்பையபுரம் முத்து லெட்சுமியின் மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட் கிளை நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.மாவட்டம் தோறும் சத்துணவு அமைப்பாளர்கள், உதவியாளர்கள், சமையலர் நியமிக்கப்பட்டுள்ளனர். அங்கன் வாடி உதவியாளர் மற்றும் அமைப்பாளர்கள் நாடு முழுவதும் நியமிக்கப்பட்டனர். பணியாளர் நியமனம் அரசியல் சட்டத்தின் 14 , 16 வது பிரிவுகளுக்கு விரோதமானது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.3 கி.மீ உள்ளவர்கள் மட்டுமே பணி நியமனத்திற்கு தகுதி உள்ளவர் என்பது தவறு என்றும், வட்டார அடிப்படையில் தகுதி நிர்ணயிப்பது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது. 3 கி.மீ வசிப்பிட வரம்பால் இட ஒதுக்கீட்டை செயல்படுத்துவது சாத்தியமாகாது என்றும் நீதிபதி தெரிவித்தார்.
பணியாளர் நியமனத்துக்கான புதிய விதிமுறைகளையும் ஐகோர்ட் வெளியிட்டது.புதிய விதிமுறையின் கீழ் இரண்டு மாதத்தில் பணி நியமனம் செய்யவு உத்தரவிட்டுள்ளது

பிரபலமான இடுகைகள்