புதன், 27 பிப்ரவரி, 2013

பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக டாக்டர் வைகை செல்வன் பொறுப்பேற்கிறார்

தமிழக அமைச்சரவையிலிருந்து மூன்று அமைச்சர்கள் நீக்கப்பட்டுள்ளனர். சுற்றுலாத்துறை அமைச்சர் கோகுல இந்திரா, பள்ளி கல்வித்துறை, சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் சிவபதி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் வி.எஸ்.விஜய் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதில் டி.பி.பூனாட்சி, டாக்டர் வைகை செல்வன், கே.சி. வீரமணி ஆகியோர் அமைச்சரவையில் சேர்க்கபட்டுள்ளனர்.
காதி மற்றும் ஊரக தொழில்துறை அமைச்சராக டி.பி.பூனாட்சி நியமிக்கப்பட்டுள்ளார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக டாக்டர் வைகை செல்வன், சுகாதாரத்துறை அமைச்சராக கே.சி.வீரமணி ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.கல்வித்துறை, தொல்லியல் துறை, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன், தமிழ்மொழி மற்றும் தமிழ் கலாச்சாரம் ஆகிய துறைகளை புதிய அமைச்சர் வைகை செல்வன் கவனிப்பார். ஊரகத் தொழில்துறை அமைச்சராக இருந்த செந்தூர் பாண்டியனுக்கு சுற்றுலாத் துறை வழங்கப்பட்டுள்ளது.
தற்போது உள்ளாட்சித்துறை அமைச்சராக உள்ள கே.பி.முனுசாமிக்கு, சட்டம், நீதிமன்றம் மற்றும் சிறைத்துறை ஆகியவை கூடுதல் பொறுப்புகளாக ஒதுக்கப்பட்டுள்ளன. புதிய அமைச்சர்களாக அறிவிக்கப்பட்ட மூன்று பேரும் நாளை காலை 11 மணியளவில் கவர்னர் மாளிகையில் பதவியேற்க உள்ளனர்.

செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

வேலூர் மாவட்டத்தில் புதிய நியமன மற்றும் பணிநிரவல் ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடைத்தது

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயற்படும் உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணி நிரவல் மற்றும் புதிய நியமன ஆசிரியர்களுக்கு ஊதியம் கிடைப்பதில் சிக்கல் இருந்து வந்தது.இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் முயற்சியால்  சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு தடையின்றி ஊதியம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது சார்ந்து சிறப்பாக செயற்பட்ட மாவட்ட நிர்வாகிகளையும் பொறுப்பாளர்களையும் மாநில அமைப்பு பாராட்டுகிறது...

புதன், 20 பிப்ரவரி, 2013

தின மணி செய்தி புதுக்கோட்டை மற்றும் தஞ்சை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்

பள்ளி மாணவர்களுக்காக நடமாடும் ஆலோசனை மையம்


தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் உளவியல் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் நடமாடும் ஆலோசனை மையம், பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் எற்படுத்தப்படவுள்ளது.
பள்ளி மாணவர்கள் சற்றுப்புறச்சூழல், குடும்ப நிலை, இளம் பருவத்தில் ஏற்படும் மாற்றங்கள், மனச்சோர்வு, மனக்குழப்பம், பாலியல் கொடுமைகள், மதிப்பெண் குறைவு போன்ற பல்வேறு காரணங்களால் பாதிக்கப்படுகின்றனர். இதன் விளைவால் கொலை, தற்கொலை உள்ளிட்ட முரண்பாடான முடிவுகளை எடுப்பதுடன் உடல் மற்றும் மனரீதியாகவும் பாதிக்கப்படுகிறது.
இந்த நிலையை மாற்றி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான சூழலை உருவாக்க, பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியருக்கு உளவியல் ஆலோசனை வழங்கும் வகையில் உளவியல் ஆலோசகர், உதவியாளர் மற்றும் அனைத்து வசதிகளுடன் கூடிய 10 நடமாடும் ஆலோசனை மையங்கள் ரூ.3 கோடி செலவில் அமைக்கப்படுகிறது.

அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் கணக்கெடுக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு


தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் அடிப்படை வசதிகள், ஆசிரியர், மாணவர்கள் என அனைத்து விவரங்களையும் கணக்கெடுக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பள்ளிகளில், முதன்மை கல்வி அலுவலரின் ஆலோசனையின் பேரில், மாவட்ட கல்வி அலுவலர்கள், நேர்முக உதவியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளின் கீழ் பல்வேறு குழுக்கள் அமைக்க வேண்டும்.
மேலும் பள்ளிகளில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியவற்றை கணக்கெடுக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

பெற்றோர்கள் எப்படி உதவலாம்?







பொதுத்தேர்வு நெருங்கும் இந்தத் தருணத்தில் மாணவர்கள் மட்டுமல்லாது, பெற்றோர்களும் தங்களைத் தகுந்த முறையில் தயார் படுத்திக் கொள்ள வேண்டும். இதில் மிக முக்கியமாக கருத்தில் கொண்டு கவனிக்க வேண்டிய விஷயம் பிள்ளைகளின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் ஆகும்.
இரவில் கண் விழித்து படிக்கும் பிள்ளைகளுக்கு, புரதச்சத்துமிக்க உணவுகளையும், சின்ன சின்னதாக இடைவெளிவிட்டு விதவிதமான பழங்களையும் படித்துக்கொண்டே சாப்பிடும் படியாக வெட்டிக் கொடுக்கலாம். குழந்தைகளின் மனநம்பிக்கை குலையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது இந்த நேரத்தில் மிக அவசியம்.
மாரத்தான் எனப்படும் ஒரு நெடு ஓட்டத்தின் கடைசிக்கட்டம் இது. மாணவர்கள் தங்கள் சக்தியின் எல்லைக் கோட்டை நெருங்கிக் கொண்டிருக்கிறார்கள். பெற்றோர்கள் இதை கவனத்தில் கொண்டு அனுசரணையாக நடந்து கொள்ளவேண்டியது மிக மிக முக்கியம். சிரமப்பட்டு படிக்கும் பிள்ளைகள், அவ்வவ்போது மன அழுத்தத்தை நீக்கும் விதமாக சிறிது நேரம் வேறு ஏதாவது செய்ய விரும்பினால், கோபப்படாமல் விட்டுக் கொடுங்கள். உங்களால் இயலுமானால் கேரம் போன்ற விளையாட்டுகளை, நீங்களும் அவர்களோடு சேர்ந்து விளையாடலாம். அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அவர்களோடு மனம்விட்டு பேசுங்கள். அவர்களின் குறிக்கோள்களை மறைமுகமாக ஞாபகப்படுத்துங்கள்.
வாழ்க்கையில் விருப்பப்பட்டு கஷ்டப்பட்டவர்களின் வெற்றிப்பாதையை முன் உதாரணமாகக் காட்டுங்கள். அது உங்களின் வாழ்க்கையில் நடந்ததாகக் கூட இருக்கலாம். எக்காரணம் கொண்டும் மற்றக் குழந்தைகளின் தன்னார்வத்தையோ, திறமையையோ பட்டியல் இடாதீர்கள். குற்றம் சொல்வதை முற்றிலுமாக தவிர்க்கவேண்டிய தருணம் இது. இன்னும் சொல்லப்போனால், தேர்வு முடிந்த பின்னான திட்டமிடல்களைக் கூட குழந்தைகளோடு மேலோட்டமாக கலந்தாலோசிக்கலாம். ‘இந்த நெடும் பயணத்தின் முடிவில் மகிழ்ச்சியும், வெற்றியும் காத்திருக்கின்றது‘ என்று புரிந்துகொள்ளும் மாணவர்கள் புத்துணர்வுடன் பாடப்புத்தகத்தில் கவனம் செலுத்துவார்கள்.
இனி என்ன? பதற்றமே இல்லாமல் தங்கள் பிள்ளைகளுடன், பெற்றோர்களும் பொதுத்தேர்வை எதிர்கொள்ளலாமே!
-டாக்டர் உமா
நன்றி kalvimalar

ஞாயிறு, 17 பிப்ரவரி, 2013

தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகள் அவசரக்கூட்டம் புதுகையில் நடந்தது


தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகிகள்  அவசர ஆலோசனைக்கூட்டம் புதுக்கோட்டை சந்தைப்பேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தலைவர் சி.முத்துசாமி தலைமை வகித்தார்.மாநில ஒருங்கிணைப்பாளர் ஆ.மணிகண்டன், தஞ்சை மாவட்டத்தலைவர் தி.சீனிவாசன்,மாநிலத்துணைத்தலைவர் எஸ்.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதுக்கோட்டை வட்டாரத்தலைவர் சோ. விஜயமாணிக்கம் அனைவரையும் வரவேற்றார். இந்த அவசர ஆலோசனைக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
 தற்போதைய தமிழக முதல்வரால் 2004 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டு கடந்த ஆட்சியில் பணிவரன் செய்யப்பட்ட 53,000 ஆசிரியர்களுக்கு  தொகுப்பூதியத்தில் பணியாற்றிய காலத்தை முழுப் பணிக்காலமாக கருதி இந்த நிதி கூட்டத்தொடரில் ஆணை வெளியிட வேண்டுதல்                            
தன் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறை படுத்த தமிழக அரசை வேண்டுதல்.
பொது மாறுதல் வழிகாட்டுதல் நெறிமுறைகளில் அலகு விட்டு அலகு மாறுதல் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தும் இது நாள் வரை  கலந்தாய்வு நடத்தப்படவில்லை என்பதை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு வருவது,
           அனைவருக்கும் இடைநிலைக்கல்வித்திட்டம் மூலம் அனைத்து நடுநிலைப்பள்ளிகளும் உயர்நிலைப்பள்ளிகளாக  ஈர்ப்பு செய்யப்பட இருப்பதால் பள்ளிக்கல்விதுறையின் அனைத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கும் பொதுவான பதவி உயர்வு முன்னுரிமை பட்டியல் வெளியிட வேண்டுதல்.
     வரும் காலங்களில்  பள்ளிக்கல்வித்துறையின் தொடக்கக்கல்வி அலகு மற்றும் பள்ளிக்கல்வி அலகில்  புதிய நியமனங்களுக்கு முன்னதாக வெளி மாவட்டங்களில் மாறுதல் பெற வாய்ப்பின்றி பல ஆண்டுகளாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் கலந்தாய்வு நடத்திட தமிழக அரசை கேட்டுக்கொள்ளுதல்,
இதில்,தஞ்சை மாவட்ட பொறுப்பாளர்கள் த.ஜெயச்செல்வன் ,ப.ஜெயபிரபு,பா.கருணாநிதி , பாபநாசம் நா.பிரபாகரன் ,புதுக்கோட்டை மாவட்டப்பொருப்பாளர்கள் கோவிந்தராசன்,மாரிமுத்து,எ.நாடிமுத்து,சி.செந்தில்,நாயகம்,பிரவீன், மாவட்ட அமைப்புச் செயலர் எம்.முத்துக்குமார்,சட்ட ஆலோசகர் எ.ராஜா, மாநில செயற்குழு உறுப்பினர் ச.முகேஷ்,  பா.ரமேஷ் குமார், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இறுதியாக புதுக்கோட்டை வட்டாரப்பொருளாளர் ஜ.சுப்பிரமணியன் நன்றி கூறினார்.  
















புதன், 13 பிப்ரவரி, 2013

மாநிலத்தலைவர் தியாகராஜன் தொகுப்பூதிய காலத்தை பணிக்காலமாக்கிட தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் - தினமலர்

மாநிலத்தலைவர் தியாகராஜன் தொகுப்பூதிய காலத்தை பணிக்காலமாக்கிட தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்  - தினமலர்

ஆசிரியர்களின் தொகுப்பூதிய காலம்பணி வரன்முறை செய்ய வலியுறுத்தல் -
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 13,2013,05:08 IST
முந்தைய அ.தி.மு.க., ஆட்சி காலத்தில், தொகுப்பூதிய அடிப்படையில், பணி நியமனம் செய்யப்பட்ட, 55 ஆயிரம் ஆசிரியர்களின் தொகுப்பூதிய காலத்தை, பணி வரன்முறைப்படுத்த, முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.கடந்த, 2004-06 வரை, இடைநிலை ஆசிரியர், 10 ஆயிரம் பேர், முதுகலை ஆசிரியர், 10 ஆயிரம் பேர் மற்றும் பட்டதாரி ஆசிரியர், 35 ஆயிரம் பேர் என, 55 ஆயிரம் பேர், தொகுப்பூதிய அடிப்படையில், பணி நியமனம் செய்யப்பட்டனர். மாதம், 3,000 ரூபாய் முதல், 4,500 ரூபாய் வரை சம்பளம் பெற்றுக் கொண்டிருந்த இவர்கள், தி.மு.க., ஆட்சி காலத்தில், பணி வரன்முறை செய்யப்பட்டனர்.

எனினும், 2004-06 வரையான, 2 ஆண்டுகள், பணி வரன்முறைக்குள் வரவில்லை. பணி வரன்முறை செய்த தி.மு.க., அரசே, தொகுப்பூதிய காலத்தையும், பணிவரன்முறைப்படுத்தி உத்தரவிட வேண்டும் என, ஆசிரியர்கள் வலியுறுத்தி வந்தனர். ஆனால், நடவடிக்கை எடுக்கப்படவில்லை.இந்நிலையில், பணி நியமனம் செய்த அரசே, இப்போதும் இருப்பதால், தொகுப்பூதிய காலத்தை, பணி வரன்செய்ய, முதல்வர் முன்வர வேண்டும் என, 55 ஆயிரம் ஆசிரியர்களும் எதிர்பார்க்கின்றனர்.தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் தியாகராஜன், கூறுகையில், ""இரண்டு ஆண்டுகளை, பணிவரன்முறை செய்யாவிட்டால், பதவி உயர்வு பாதிக்கப்படுவதுடன், தேர்வு நிலை, சிறப்புநிலை அடைய, கூடுதலாக, இரு ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும்.'' என்றார்.நமது நிருபர் -

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=647245

பிரபலமான இடுகைகள்