ஞாயிறு, 23 மார்ச், 2014

சமத்துவம் சமநீதியை போதிக்கும் ஆசிரியர்களுக்கு நீதி கிடைக்குமா ? ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை

ஆசிரியர் தேர்வு வாரிய தர எண் அடிப்படையில் பதவி உயர்வு மூதுரிமையை பெற இயலாமல் தவிக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் ஒவ்வொரு ஆண்டும் பள்ளிக்கல்வித்துறையின் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கான பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய தர எண் அடிப்படையில் தயாரிக்கப்பட்டு அதனடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. 

பள்ளிக்கல்வித்துறையை நிர்வாக வசதிக்காக பொருத்தவரை இது தனது நிர்வாகத்தின் கீழ் தொடக்கக்கல்வி அலகு மற்றும் பள்ளிக்கல்வி அலகு எனும் இரு அலகுகளாக 1986 ஆம் ஆண்டு முதல் செயற்பட்டு வருகிறது. 1989 ஆம் ஆண்டுக்கு பிறகு தொடக்கக்கல்வித்துறையின் அனைத்து பஞ்சாயத்து யூனியன் பள்ளிகளில் பணியாற்றிய ஆசிரியர்களும் அரசுப்பள்ளி ஆசிரியர்களாக ஈர்க்கப்பட்டு தற்போது வரை பள்ளிக்கல்வித்துறை செயலரின் கீழ் தொடக்கக்கல்வி இயக்குனரின் நிர்வாக அலகில் செயற்படும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றி வருகின்றனர். 
       
 2003 ஆம் ஆண்டு முதல் முதல் அனைத்து நடுநிலைப்பள்ளிகளிலும் அந்தந்த பாடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பது என அரசு முடிவெடுத்து 2004 ஆம் ஆண்டு ஜூலை 1 தேதி முதல் நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பள்ளிகல்வித்துறையின் மேல்நிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றுவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தேர்வின் பொதுவான தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் அரசின் கொள்கை முடிவின் மூலம் நடுநிலைப்பள்ளிகளில் கல்வித்தரத்தை உயர்த்தும் நோக்கத்திற்காக நடுநிலைப்பள்ளிகளில் நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களின் பதவி உயர்வு குறித்து எவ்வித விதி திருத்தமும் இதுநாள் வரை பள்ளிக்கல்வித்துறையால் மேற்கொள்ளப்படவில்லை என்பதோடு இதுநாள் வரை நடுநிலைப்பள்ளிகளில் நியமிக்கப்பட்ட இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களில் எவரும் முறையான பதவி உயர்வு பதவியான முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு நிலையை பெற இயலவில்லை. 

அத்துடன் தற்போது அனைவருக்கும் இடைநிலைக்கல்வித்திட்டத்தின் மூலம் தரம் உயர்த்தப்படும் நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றிய பட்டதாரி ஆசிரியர்கள் 2004 ஆம் முதல் அதே பள்ளியில் பணியாற்றி இருந்தாலும் தரம் உயர்த்தப்பட்ட பள்ளியில் இளையவராகவே கருதப்பட்டு மாறுதல்,பதவி உயர்வு ,வருகைப்பதிவேடு ஆகியவற்றில் கடை நிலையிலையே வைக்கப்படுவர். 

 இதற்கு காரணாமாக கூறப்படுவது நடுநிலைப்பள்ளி வேறு அலகு உயர்நிலைப்பள்ளி வேறு அலகு என்பது தான். ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என்ற கொள்கை முடிவை தொடர்ந்து நடுநிலைப்பள்ளிகளில் நேரடி நியமனம் மூலம் புதிதாக பணியிடம் உருவாக்கப்படும் போது அதற்கான பதவி உயர்வு வழிமுறைகளை உருவாக்காததன் விளைவாக அலகு விட்டு அலகு மாறுதல் பெற்றவர்கள் மற்றும் தரம் உயர்த்தப்படும் பள்ளிகளில் ஈர்ப்பு செய்யப்படும் பட்டதாரி ஆசிரியர்களிடம் நான் இத்துறையில் இளையவராக இருக்க சம்மதிக்கிறேன் 
என்ற ஒரு ஒப்புதல் கடிதத்தை பெற்று விட்டு, பட்டதாரி ஆசிரியர்களின் நியமன ஆணையில் குறிப்பிட்டுள்ளவாறு ஆசிரியர் தேர்வு வாரிய தர எண் அடிப்படையில் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய மூதுரிமை மறுக்கப்படுவதோடு கடந்த ஆண்டு வரை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பதவி உயர்வு பெற்றுள்ளவர்கள் இளையவர்களாக இருந்தும் கடந்த இரண்டு கல்வி ஆண்டுகளில் 2005 ஆம் வரை நியமிக்கப்பட்ட தாவரவியல், விலங்கியல், வேதியியல், இயற்பியல் ஆகிய முதன்மைப் பாடங்களை கொண்ட பட்டதாரி ஆசிரியர்கள் முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றுவிட்டனர்.

 ஆனால் 2003 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆசிரியர் தேர்வு வாரியத்தேர்வில் தேர்வு செய்யப்பட்ட அதே பாட ஆசிரியர்கள் இதுநாள் வரை எவ்வித பதவி உயர்வையும் இதுநாள் வரை பெறவில்லை என்பதோடு இந்த 2013 – 14 ஆம் கல்வி ஆண்டுக்கான முதுநிலை ஆசிரியர் பட்டியலில் சேர்க்க இயலாது என்று இவர்களின் விண்ணப்பங்கள் முதன்மைக்கல்வி அலுவகங்களில் திருப்பி கொடுக்கப்பட்டு விட்டன. இந்நிலையில் இந்த ஆண்டு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பட்டியல் தயாரிப்பிதற்கான வழிகாட்டுதல் நெறிமுறையில் இதே தொடக்கல்வி அலகில் பணியாற்றும் உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்கள் 30 பேருக்கு பதவி உயர்வு வழங்க ஏதுவாக தொடக்கக்கல்வி இயக்குனரிடம் பட்டியல் கோரப்பட்டுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது . 

அதுமட்டுமின்றி அனைவருக்கும் இடைநிலைக்கல்வித்திட்டம் மூலம் 2011- 12 ஆம் கல்வி ஆம் ஆண்டு வரை 1254 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரம் நடுநிலைப்பள்ளிகளுக்கு மேலானவை தரம் உயர்த்தப்பட உள்ளது. இந்நிலையில் இங்கே பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் கட்டாய ஈர்ப்பு செய்யப்படும் நிலை உள்ளது என்பது நிதர்சனம். ஒரே தேர்வில் தேர்வு செய்யப்பட்டவர்களில் ஒரு சாரார் தொடர் பதவி உயர்வு வாய்ப்புகளை தொடர்ந்து பெறுவதும் ஒரு சாராருக்கு பழைய விதிமுறைகளை காரணம் காட்டி மறுப்பதும் இயற்கை விதிக்கு முரணானது. 

இது போன்ற சூழ்நிலையில் எவ்வித பதவி உயர்வையும் பெற இயலாமல் வாய்ப்பு மறுக்கப்படும் நிலையை அரசு உணர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் இது போன்று பதவி உயர்வு வாய்ப்பு தொடர்ந்து நழுவிப்போவதால் சம்பந்த பட்ட ஆசிரியர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிள்ளனர். மேலும் சமத்துவம் சமநீதியை போதிக்கும் ஆசிரியர்களுக்கு நீதி கிடைக்கும் என்ற என்று எதிபார்த்து காத்திருக்கின்றனர் . 

 கருத்து வெளியிட்டவர் ஆ.மணிகண்டன் (பட்டதாரி ஆசிரியர்) மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் எண்:22,செந்தில் நகர் , பழைய பெருங்களத்தூர்,சென்னை -600063 கை பேசி : 9942503088

வெள்ளி, 21 மார்ச், 2014

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நேரத்தை மாற்ற வேண்டும் ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை



   புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க புதிய வட்டாரக்கிளை நிர்வாகிகள் தேர்வு மற்றும் செயற்குழுக்கூட்டம் திருமயம்  வட்டாரத்தலைவர் நாகப்பன் தலைமையில் சங்க அலுவலகத்தில்  நடைபெற்றது  இதில் மாவட்டத்தலைவர் முத்துசாமி மாவட்ட செயலாளர் எம்.பழனிச்சாமி மாவட்ட அமைப்பு செயலாளர் முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் . மாநில ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் சிறப்புரையாற்றினார்.
அரிமளம் வட்டாரக்கிளை புதிய தலைவராக சோமு  வட்டார செயலாளராக மதியழகன்  வட்டார பொருளாளராக சண்முகம் வட்டார ஒருங்கிணைப்பாளராக ராமு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்
இதில்   பொதுத்தேர்வு எழுதும் கிராமப்புற மாணவர்களின் போக்குவரத்து வசதியை கருத்திற்கொண்டு பழைய முறைப்படி காலை பத்துமணிக்கு தேர்வு நேரத்தை மாற்றிட அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது
புதிய  பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டுதல்  அலகு விட்டு அலகு மாறுதலை நடத்திட வேண்டுதல் தொகுப்பூதியத்தில் பணியாற்றிய காலத்தை பணிக்காலமாக்கி அரசாணை வெளியிட வேண்டுதல்
நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறையில் முதுகலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படும் பணியிடங்களில் 50% பணியிடங்களை  பதவி உயர்வு பணியிடங்களாக  மாற்றிட  நடவடிக்கை வேண்டுதல்
 ஒப்பந்த முறையில் பணியாற்றும் அனைத்து வகை ஆசிரியர்களையும்  பணி நிரந்தரம் செய்ய வேண்டுதல்
உள்ளிட்ட  தீர்மானங்கள் தீர்மானங்கள் நிறைவற்றப்பட்டன . இதில் மாநில நிர்வாகிகள் சட்ட ஆலோசகர் ராஜா செயற்குழு உறுப்பினர் ஜெகதீஸ்வரன்  மாவட்ட நிர்வாகிகள் மகளிரணி செயலாளர் நாகலட்சுமி   துணைத்தலைவர்கள் ராஜாங்கம் முகேஷ் வட்டார நிர்வாகிகள் ரமேஷ்குமார் சோமசுந்தரம் பிரவீன்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர் முன்னதாக வட்டாரத்தலைவர் சோமு அனைவரையும் வரவேற்றார் இறுதியாக பொருளாளர் சண்முகம் நன்றி கூறினார்.


பிரபலமான இடுகைகள்