புதன், 26 செப்டம்பர், 2012

CCE பயிற்சி தேதி மாற்றம் அறிவிப்பு

SCERT  LETTER 15096 /E2/11                                           DATED ON 24-09-2012



இடைநிலை ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு - 27/09/2012 

நடுநிலை , உயர்நிலைப்பள்ளி , மேல்நிலைப்பள்ளித்தலைமை 

ஆசிரியர்களுக்கு - 28/09/2012

பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் நடுநிலை வகுப்பு கையாளும் இடைநிலை 

ஆசிரியர்களுக்கு - 29/09/2012

திங்கள், 24 செப்டம்பர், 2012

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக பதவியேற்றுள்ள முதன்மைக்கல்வி அலுவலர் திரு.நா.அருள்முருகன் மற்றும் கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர் திரு ஆர்.சுவாமிநாதன் ஆகியோரை நமது மாநில ,மாவட்ட ,வட்டார பொறுப்பாளர்கள் வரவேற்றனர்.



புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக பதவியேற்றுள்ள முதன்மைக்கல்வி அலுவலர் திரு.நா.அருள்முருகன் அவர்களுக்கு முன்னாள் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீஸ்வரன் அவர்கள் சால்வை அணிவித்தார் உடன் மாநில சட்ட ஆலோசகர் ராஜா ,மாநில செயற்குழு உறுப்பினர் முகேஷ் ,மாவட்ட செயலாளர் பழனிசாமி,மாநில ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், மாநில துணைத்தலைவர் பன்னீர்செல்வம்,மாவட்ட மகளிரணி நாகலட்சுமி ,மாவட்ட அமைப்பு செயலாளர் முத்துக்குமார்,வட்டார பொறுப்பாளர்கள் பால்ராஜ்,செந்தில்,மாரிமுத்து,நாகப்பன்,சமீம்,தெய்வீகன்,மாவட்ட பொருளாளர் செந்தில்குமார்,மாவட்ட துணைச்செயலாளர் கோவிந்தராஜன் மாவட்ட துணைத்தலைவர் நாடிமுத்து மற்றும் ஏராளமான பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.                                                                                                                                                                                          

சனி, 22 செப்டம்பர், 2012

அலகு விட்டு அலகு மாறுதலில் சென்றவர்களுக்கும் தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் விரைவில் பதவி உயர்வு முன்னுரிமை பெற்று தரப்படும்

அலகு விட்டு அலகு மாறுதலில் சென்றவர்களுக்கும் தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் விரைவில் பதவி உயர்வு முன்னுரிமை  பெற்று தரப்படும் .

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில அமைப்பு தொடக்கக்கல்வி மற்றும் பள்ளிக்கல்வி அலகில் பணியாற்றும் அனைத்து வகை ஆசிரியர்களையும் ஒருங்கிணைத்து செயல்பட்டுவரும் ஒரே ஆசிரியர் அமைப்பு என்ற பெருமையோடு மற்ற சகோதர அமைப்புகளோடு இணக்கமான நட்பையும் அதே நேரத்தில் நமது உரிமைகளையும் விட்டுக்கொடா வண்ணம்  தொடர்ந்து இயங்கி வருகிறது.

இதில் நாம் ஏனைய ஆசிரிய நண்பர்களுக்கும் அரசு ஊழியர் பெருமக்களுக்கும் ஏற்பட்ட ஊதிய முரண்பாடு குறிப்பாக அடிப்படை ஊதியத்தோடு  1.86 அளவுக்கு அதிக ஊதிய மடங்கினைப்பெற்றதன் மூலம் 31.05.2009 வரை நியமனம் பெற்ற அனைவரும் இதன் பலனை அடைய நமது சங்கம் மட்டுமே காரணமாக இருந்தது என்பதை பெருமையோடு திரும்பி பார்க்கிறோம்.
அதே நேரத்தில் நமது அடிப்படை கோரிக்கைகளான பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை அரசு கைவிட வேண்டுதல்.
தொகுப்பூதிய காலத்தை பணிக்காலமாக்கிட அரசு உரிய நடவடிக்கை எடுத்தல்.
     தொடரும்......

பிரபலமான இடுகைகள்