வெள்ளி, 7 ஏப்ரல், 2017

வரலாற்று பணியில் TAMS


பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க கோரிக்கை



போலீசுக்கு ஆதரவாக தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்


கருவேல மரங்களை அகற்றும் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் -

புதுக்கோட்டை மாவட்டத்தில் கருவேல கன்றுகளை அகற்றும் அரசுப்பள்ளி மாணவர்கள் – ஆசிரியர் பெற்றோர் ஆதரவுடன் மாணவர்கள் சமூகப்பணி
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதி அரசுப்பள்ளிகளில் கருவேல மரக்கன்றுகளை அகற்றும் பணியை பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவுடன் பள்ளிமாணவர்கள் செய்து வருகிறார்கள் இந்தப்பணியை தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் ஒருங்கிணைப்பு செய்து பங்கேற்கும் மாணவர்களுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறது.
இதுகுறித்து சங்கத்தின் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள கருவேலக்கன்று அகற்றும் திட்டத்தினுடைய ஒருங்கிணைப்பாளரும் கந்தர்வகோட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியருமான கு.சோமசுந்தரம் கூறியதாவது,
நீதி மன்ற உத்தரவும் அதனைத்தொடர்ந்து அதனை நடைமுறைப்படுத்தும் அரசு நிர்வாகமும் ஓரளவுதான் இதுபோன்ற சமூக புரட்சிகளையும் ஏற்படுத்த முடியும் , பொதுமக்களும் இளைஞர்களும் தாமாக முன்வந்து இதுபோன்ற நிகழ்வுகளில் பங்கேற்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே இத்திட்டத்தை நாங்கள் முன்னெடுத்துள்ளோம்.
   கந்தர்வகோட்டை ஒன்றியத்தின் அனைத்து பள்ளிகளிலும் கருவேல மரக்கன்றுகளை பெற்றோர்களின் உதவியோடு அகற்றும் பணியை ஊக்கப்படுத்திடும் நோக்கத்திற்காக இந்த சமூகப்பணியில் ஈடுபட்டு நூறு கருவேல மரக்கன்றுகளை அகற்றி சம்பந்தப்படுத்தப்பட்ட பள்ளி ஆசிரியரிடம் ஒப்படைக்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவித்துள்ளதோடு அதிக மரக்கன்றுகளை அகற்றும் மாணவர்களுக்கு ஊக்கப்பரிசும் வழங்கவுள்ளோம் , அது மட்டுமின்றி இந்தப்பணியில் தம்மை இணைத்துக்கொண்டுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கேடயம் வழங்கப்பட திட்டமிட்டுள்ளதாகவும் , ஆசிரியர்களின் பங்களிப்போடு பொக்கலைன் இயந்திரம் கொண்டு சீமைக்கருவேல  அகற்றும் பணியை மேற் கொள்ளவுள்ளதாகவும் இது குறித்து உயர் அலுவலர்களின் ஆலோசனைகளை பெறவுள்ளதாகவும்  தெரிவித்தார்.




பல்வேறு நிகழ்வுகளில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்





பிரபலமான இடுகைகள்