செவ்வாய், 7 ஏப்ரல், 2015

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்த மறுநாளே விடைத்தாள் திருத்தும் பணியை தொடங்க வேண்டும் – ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை


பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வருகிற ஏப்ரல் 10 ல் முடிவடைகிறது. பள்ளிக்கல்வித்துறை பெரும்பாலும் தேர்வு முடிந்த மறுநாளே விடைத்தாள் திருத்தும் பணியை தொடங்கி விடும் ஆனால் இந்த ஆண்டு பல்வேறு காரணங்களால் ஏப்ரல் இருபது தேதிக்கு பிறகு  விடைத்தாள் திருத்தும் பணியை தொடங்க திட்டமிட்டுள்ளது இதனைத்தொடர்ந்து வழக்கம்போல தேர்வு முடிந்த மறுநாளே விடைத்தாள் திருத்தும் பணியை தொடங்குமாறு ஆசிரியர்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.
விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் இறுதி வாரத்தில் தொடங்குவதால் மொழிப்பாடங்களுக்கு மே மாதம் இரண்டாம் வாரம் வரை நீடிக்க வாய்ப்புள்ளது இதனால் தங்களது குழந்தைகளின் விடுப்பு நேரத்திலும் அவர்களோடு இருக்க இயலாத நிலை ஏற்படும் என்றும் இதனால் தங்களது குடும்பத்தை பிரிந்து வெளிமாவட்டங்களில் பணியாற்றுபவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக நேரிடும் என்று ஆசிரியைகள் புலம்புகின்றனர்.

மாலை நேர சிறப்பு வகுப்புகள் விடுமுறைகளில் சிறப்பு பயிற்சி என்று அரசின் வழிகாட்டுதலுக்கிணங்க செயற்படும் ஆசிரியர்கள் இந்த விடுமுறையையாவது தங்களது பிள்ளைகளோடு இருந்து பராமரிப்பு செய்ய வாய்ப்பாக விடைத்தாள் திருத்தும் பணியை விரைவில் தொடங்கிடவும்  இதற்கு காரணமாக கூறப்படும்  ஆறு முதல் ஒன்பதாம் வகுப்புகளுக்கான மூன்றாம் பருவத்தேர்வுகளை நடத்திட ஏதுவாக சுழற்சி முறையில் ஆசிரியர்களை விடைத்தாள் திருத்தும் பணிக்கு அழைப்பதன் மூலம் கண்காணிப்பு பணிக்கு ஆசிரியர் பற்றாக்குறை இன்றி மூன்றாம் பருவத்தேர்வுகளை செம்மையாக நடத்திட முடியும் என்றும் தெரிவித்துள்ளனர் இது குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க ஆசியர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது..

ஞாயிறு, 5 ஏப்ரல், 2015

தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நிறுவனர் திருவாளர் ச.அப்துல் மஜீத் அவர்கள் இன்று இயற்கை எய்தினார்

தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நிறுவனரும், ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களின் தொடக்கக்கால முதுபெரும் தலைவர்களில் ஒருவருமான திருவாளர் ச.அப்துல் மஜீத் அவர்கள் இன்று 05/04/2015  காலை 11.15 மணியளவில் உடல் நலக்குறைவால் இயற்கை எய்தினார். 


தொடக்கக்காலம் தொட்டே நம்மோடு இணைந்து பணியாற்றிய அய்யா அவர்கள் நமது இயக்கத்தோடு  கொள்கை ரீதியில் முரண்பட்டிருந்தாலும் அன்னாரின்  கொள்கைப்பிடிப்பு எல்லோரையும்  கவர்வதாகவும் தனித்துவமிக்கதாகவும்  நமது மனத்தில் இடைபெற்றுள்ளது ....   

அன்னாரின்  இறப்பு  என்பது அனைத்து சங்கங்களுக்கான இழப்பாகவே ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கருதுகிறது.....

அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தார்க்கும் இயக்க நண்பர்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கல்கள்.....



பிரபலமான இடுகைகள்