வெள்ளி, 25 ஜனவரி, 2013

நமது வேலூர் மாவட்டக்கிளையின் சார்பாக இந்த ஆண்டுக்கான நாட்காட்டியை மாநிலத்தலைவர் கு.தியாகராஜன் வெளியிட்டார்

இவ்விழாவினை மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்த ஜி.டி.பாபு , வடிவேல் வெங்கட்டரமணன்,வெங்கடேசன் ஆகியோர்  தலைமையிலான  மாநில மற்றும்  மாவட்ட நிர்வாகிகளை அனைவரையும்   மாநில அமைப்பு மனதார பாராட்டுகிறது  








https://sites.google.com/site/tamsgdbabu/calendar 2013

திங்கள், 21 ஜனவரி, 2013

M.Phil ., incentive for BT Assistants government order issued by tamilnadu government

எம். ஃ பில்., படித்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்குவதற்கான அரசாணை நிலை எண் :18 நாள் : 18/01/2013 பதிவிறக்கம் செய்ய இந்த இணைப்பை சுட்டவும் அரசாணை நிலை எண் 18 DOWNLOAD HERE

சனி, 19 ஜனவரி, 2013

பள்ளி மாணவர்களுக்கு கலை, இலக்கியப் போட்டிகள் SSA நடத்துகிறது


பள்ளி மாணவ, மாணவியருக்கு இடையே கலை, இலக்கியப் போட்டிகளை ஜனவரி 21 முதல் நடத்த வேண்டும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளிகள், ஒன்றிய, மாவட்ட அளவிலும் இந்தப் போட்டிகளை அவர்கள் நடத்த வேண்டும் என்று அனைவருக்கும் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மாணவர்களிடம் பன்முகத் திறனை வளர்க்கவும் 1 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1,2 ம் வகுப்பு மாணவர்களுக்கு பாட்டுப் போட்டி, ஓவியப் போட்டி, மாறுவேடப் போட்டியும், 3,4,5ம் வகுப்பு மாணவர்களுக்கு ஓவியப் போட்டி, குழுப்பாடல்கள், நடிப்பு, கட்டுரைப் போட்டிகளும் நடத்தப்பட வேண்டும். 6,7,8-ம் வகுப்பு மாணவர்களுக்கு இவற்றோடு பேச்சுப்போட்டி, விநாடி-வினா, ஓவியப் போட்டியும் நடத்தப்பட வேண்டும். 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, விநாடி-வினா போட்டி, ஓவியப்போட்டி உள்ளிட்ட போட்டிகளும் நடத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி அளவிலான போட்டிகள் ஜனவரி 21 முதல் 25 வரையிலும், ஒன்றிய அளவிலான போட்டிகள் ஜனவரி 28 முதல் 30 வரையிலும், மாவட்ட அளவிலான போட்டிகள் பிப்ரவரி 2 முதல் 6 வரையிலும் நடத்தப்பட வேண்டும். ஒன்றிய, மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கப்படும்.
மாவட்ட அளவில் வெற்றி பெற்ற முதல் இரண்டு பேர் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க வேண்டும். மாநில அளவிலான போட்டிகள் பிப்ரவரி 12 முதல் 16 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாநில அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.20 ஆயிரமும், இரண்டாவது பரிசாக ரூ.10 ஆயிரமும், மூன்றாவது பரிசாக ரூ.5 ஆயிரமும் வழங்கப்படும் என அனைவருக்கும் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

ஞாயிறு, 13 ஜனவரி, 2013

எமது உறவுகளுக்கு புத்தாண்டு பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்வது.....

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் 

பிற பணி என்ற பெயரில், பள்ளிக்கூட பணிகளை கவனிக்காத, தலைமை ஆசிரியர்களுக்கு, ஆறு முக்கிய விதிமுறைகளை விதித்து, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்த தகவல்  பள்ளிக்கல்வித் துறை மூலம், சி.இ.ஓ., அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
"பிற பணி' என்ற பெயரில், பள்ளிக்கூட பணிகளை கவனிக்காத, தலைமை ஆசிரியர்களுக்கு, ஆறு முக்கிய விதிமுறைகளை விதித்து, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களில் சிலர், பள்ளி வேலை நாட்களில், பிற பணி என்ற பெயரில், வெளியூர் செல்வதும், சொந்த பணிகளை கவனிப்பதாகவும், அரசின் கவனத்திற்கு புகார் சென்றது. இதனால், அலுவலக பணிகளுடன், மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்படுவதை தவிர்க்க, பள்ளிக் கல்வித்துறை புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி... பள்ளி வேலை நாட்களில் தலைமை ஆசிரியர்கள், பிற பணிக்காக வெளியூர் செல்ல, சி.இ.ஓ.,வின் முன்அனுமதியை பெற வேண்டும். பிற பணி விவரங்களை, பள்ளியில் பராமரிக்கப்படும் நடமாடும் பதிவேட்டில் பதிய வேண்டும். இதே விவரங்களை, சி.இ.ஓ., அலுவலக நடமாடும் பதிவேட்டிலும் இடம் பெற செய்ய வேண்டும். சி.இ.ஓ.,க்கள் தங்களது மாவட்டத்தில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்களின், பிற பணிகளை அறிந்து, தேவைப்படும் பட்சத்தில், உயரதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும். தவிர்க்க முடியாத காரணத்திற்காக மட்டுமே, தலைமை ஆசிரியர்களை, சி.இ.ஓ.,க்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் நேரில் வரவழைக்க வேண்டும். சி.இ.ஓ., - டி.இ.ஓ., அலுவலகங்களில் தபால் கொடுத்தல் போன்ற சாதாரண பணிகளுக்கு, பள்ளி அலுவலக ஊழியர் அல்லது பணி சுமையில்லாத பிற ஆசிரியர்களை பயன்படுத்தலாம். இந்த விதிமுறைகள் அடங்கிய உத்தரவு கடிதம், பள்ளிக்கல்வித் துறை மூலம், சி.இ.ஓ., அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

பிரபலமான இடுகைகள்