புதன், 25 பிப்ரவரி, 2015

உறுப்பினர் சந்தாவை விரைவாக்குவோம்........!

அனைத்து மாவட்டங்களிலும் நமது உறுப்பினர் சேர்க்கையை விரைவுப்படுத்தி சங்கத்தை வலுவாக்கிட ஒன்றுபட்டு புறப்படுவோம்...!

மாநிலம் முழுக்க நமது கோரிக்கை முழக்கம் பரவிட துணை நிற்போம்..!! 

திங்கள், 23 பிப்ரவரி, 2015

புறப்படுவோம்....! போராட்ட களத்திற்கு....!!

ஜேக்டோ போராட்ட செயற்பாடுகளில் மிகுந்த முனைப்போடு செயற்படுவோம்  ஒவ்வொரு நகர்விலும் நமது பங்களிப்பை உறுதி செய்வோம்...எவ்வித சமரசத்திற்கும் இடமின்றி  ....தோழமை சங்கங்களோடு எவ்வித கருத்து மோதலுக்கும் இடமின்றி சகிப்புத்தன்மையோடு களம் காண்போம்...! தனித்துவமிக்க ஆசிரிய முன்னேற்ற சங்கத்தின் மாண்பை உயர்த்திப்பிடிப்போம்...!!

ஓன்று படுவோம்...! போராடுவோம்..!! வெற்றி காண்போம்!!!

ஞாயிறு, 15 பிப்ரவரி, 2015

புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர், : தமிழ் நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய கோரி நேற்று முன்தினம் திருவள்ளூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் எஸ்.டி. ஆனந்தன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பி.கே.எஸ். ஆனந்த் வரவேற்றார். புதிய ஓய்வூதிய திட்டத்தை மத்திய, மாநில அரசுகள்கைவிடவேண்டும். தொகுப்பூதிய பணிக்காலத்தை மாநில அரசு கணக்கில் எடுத்துக்கொள்ளவேண் டும். 

இடைநிலை, முதுநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கவேண்டும். பணிப் பாதுகாப்பும், உயிர் பாதுகாப்பும் ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர்.  மாவட்ட நிர்வாகிகள் காமராஜ், நடராஜ், ஆறுமுகம், சுந்தரபாண்டியன், ஹரி, பாலமுருகன் மற்றும் தோழமை சங்கத்தினர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். அமைப்பு செயலாளர் எஸ். வெங்கடேஷ்பாபு நன்றி கூறினார்.
தினகரன் திருவள்ளூர்

சிவகங்கையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன் தமிழ்நாடு முன்னேற்ற சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது

ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


சிவகங்கையில் புதிய ஓய்வுதியத் திட்டத்தை ரத்துசெய்யக்கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.   சிவகங்கையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன் தமிழ்நாடு முன்னேற்ற சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத்தலைவர் பெஞ்சமின் தலைமை வகித்தார்.  செயலாளர் சிங்காரவேலன், பொருளாளர் மாரியப்பன், மகளிரணி செயலாளர் முத்துலட்சுமி முன்னிலை வகித்தனர். புதிய ஓய்வூதிய திட்டத்தால் ஓய்வு பெற்றவர்கள் மற்றும் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எவ்வித பலனும் இல்லை. எனவே இத்திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதில் நிர்வாகிகள் ஆரோக்கியசாமி, பாலகிருஷ்ணன், பீட்டர், சண்முகவடிவேல், வெள்ளைத்துரை, பூமிநாதன், மலைராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டர்.

சென்னை ஆர்பாட்டம் - மாநிலத்தலைவர் தலைமையில் நடந்தபோது எடுத்த தினகரன் சிறப்பு படம்


  • தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷம் எழுப்பினர்.தினகரன் சென்னை

புதிய ஓய்வூதிய திட்டம் ரத்துகோரி பட்டதாரி ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

 கரூர் தினகரன்                                                                                              கரூர், : அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் கோபிநாத் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் நித்தியானந்தன் வரவேற்றார். மாவட்ட துணைத்தலைவர் பிச்சைமுத்து, மகளிரணி அபிராமி, துணைச் செயலாளர் கார்த்திக்கேயன் உட்பட பலர் பேசினர். மாநில பொதுச் செயலாளர் ராஜ்குமார் கலந்து கொண்டு கோரிக்கை குறித்து பேசினார். பிற சார்பு சங்க நிர்வாகிகளான மாசிலாமணி, திருநாவுக்கரசு, செல்வதுரை, திருமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.                                                              கரூர் மாவட்டத்தில் காலியாக உள்ள டேடா என்ட்ரி ஆபரேட்டர், எம்ஐஎஸ் கோ ஆர்டினேட்டர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை முறைப்படுத்திட வேண்டும். அனைவருக்கும் கல்வி இயக்க பணிகள் தவிர்த்து, கல்வித்துறை சார்ந்த அலுவலகப் பணிகள் செய்யுமாறு நிர்ப்பந்திப்பதை தவிர்க்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

புதுக்கோட்டை மாவட்ட ஆர்பாட்டம் - தினமலர்


பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தைரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

பதிவு செய்த நாள்

13பிப்
2015 
புதுக்கோட்டை: புதுக்கோட்டை முதன்மை கல்வி அலுவலகம் முன்பு, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி, மாவட்ட தலைவர் முத்துச்சாமி தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மாநில ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் சிறப்புரையாற்றினார் மாநில செயற்குழு உறுப்பினர் ஜெகதீஸ்வரன் தொடங்கிவைத்து பேசினார்.பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, 2004 ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 2006 ம் வரையிலான தொகுப்பூதிய காலத்தை முழுப்பணி காலமாக்கி ஆணை வெளியிட வேண்டும்.தற்போது நியமிக்கப்பட்டுள்ள ஓவிய, கணினி, உடற்கல்வி, இசை ஆசிரியர் ஒப்பந்த நியமனங்களை ரத்துசெய்து, காலமுறை ஊதியத்திற்கு கொண்டுவர வேண்டும். ஆசிரியர் கலந்தாய்வை, ஒழிவு மறைவின்றி நடத்திட வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.ஆர்ப்பாட்டத்தில் மாநிலத்துணை தலைவர் பன்னீர்செல்வம். மாநில சட்ட ஆலோசகர் ராஜா, உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மதுரை ஆர்பாட்டம்

முகப்புArrowசெய்திகள்Arrowமாவட்ட செய்திகள்Arrowமதுரை
ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
கருத்துகள்
0
வாசிக்கப்பட்டது
19
பிரதி
Share
மாற்றம் செய்த நாள்:
வியாழன் , பெப்ரவரி 12,2015, 4:15 AM IST
பதிவு செய்த நாள்:
புதன், பெப்ரவரி 11,2015, 11:42 PM IST
மதுரை தல்லாகுளம், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவகம் முன்பு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடந்தது. மாவட்டத் தலைவர் ஜெயச்சந்திரன் தலைமை தாங்கினர். மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார், ஒருங்கிணைப்பாளர் சிவராமன் முன்னிலை வகித்தனார்.
ஆர்ப்பாட்டத்தில், புதிய ஓய்வூதிய திட்டத்தை மத்திய அரசு கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டும். 2004–06–ம் ஆண்டு தொகுப்பூதிய காலத்திற்கான காலமுறை ஊதியம் வழங்கவேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன. முடிவில் மாவட்ட பொருளாளர் மாரிமுத்து நன்றி கூறினார்.

தமிழ் முரசில் - திருவள்ளூர் ஆர்பாட்டம்

2015
13
Feb
புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து கோரி ஆசிரியர் முன்னேற்ற சங்கம் ஆர்ப்பாட்டம் 

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
திருவள்ளூர்: தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி திருவள்ளூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத் துக்கு மாநில செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் எஸ்.டி. ஆனந்தன் தலைமை வகித்தார். மாவட்ட செய லாளர் பி.கே.எஸ்.ஆனந்த் வரவேற்றார். புதிய ஓய்வூதிய திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிடவேண்டும். தொகுப்பூதிய பணிக்காலத்தை மாநில அரசு கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும், இடைநிலை,
முதுநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கவேண்டும், பணி பாதுகாப்பும், உயிர் பாதுகாப்பும் ஆசிரியர்களுக்கு வழங்கவேண்டும் உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தினார்.

இதில், மாவட்ட நிர்வாகிகள் காமராஜ், நடராஜ், ஆறுமுகம், சுந்தர பாண்டியன், ஹரி, பாலமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். அமைப்பு செயலாளர் எஸ்.வெங்கடேஷ்பாபு நன்றி கூறினார்.சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்; சமூக நலத்துறை ஆணையாளரை கண்டித்து திருவள்ளூர் எம்ஜிஆர் சிலை அருகே தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர் சத்யநாதன் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகி வாசுகி உ
- See more at: http://tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=70442#sthash.Hh6EVs1y.dpuf

திருநெல்வேலி ஆர்ப்பாட்டம்

நெல்லை ஆர்பாட்டம்
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க கோரிக்கை
கருத்துகள்
0
வாசிக்கப்பட்டது
9
பிரதி
Share
மாற்றம் செய்த நாள்:
வியாழன் , பெப்ரவரி 12,2015, 4:30 AM IST
பதிவு செய்த நாள்:
புதன், பெப்ரவரி 11,2015, 10:27 PM IST
மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வற்புறுத்தி நெல்லையில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
ஆர்ப்பாட்டம்தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தினர் நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
மாவட்ட தலைவர் பாபுவேலன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் சந்திரன் வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர் பிளசிங் பாக்கியராஜ் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கையை வற்புறுத்தி கோஷங்கள் போட்டனர்.
பழைய ஓய்வூதிய திட்டம்இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். 2004–ம் ஆண்டு முதல் 2006–ம் ஆண்டு வரையிலான தொகுப்பூதிய காலத்தை முழுப்பணிக்காலமாக அறிவித்து காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வற்புறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயலாளர் முருகேசன், தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் இயக்குனர் சங்க நிர்வாகி குமாரசேகரன், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க துணை தலைவர் சுரேஷ்குமார், செயற்குழு உறுப்பினர் பழனிக்குமார், ஒன்றிய செயலாளர் எழிலரசன், மகளிர் அணி செயலாளர் வனிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

புதன், 11 பிப்ரவரி, 2015

நாகை - ஆர்பாட்டம்


தினமணி , தினகரன் -ஆர்பாட்ட செய்தி.....




காஞ்சிபுரம்.....கிருஷ்ணகிரி ..... ஆர்ப்பாட்டம்.......தினமலரில்.....

நக்கீரனில்.....புதுக்கோட்டை ஆர்பாட்டம்....

தினகரன்.......மாநிலத்தலைவர் அழைப்பு

எழுச்சிமிகு திருநேல்வேலி

எழுச்சிமிகு ஆர்பாட்டம்.....!

மாவட்டங்களின் முதல்கட்ட படங்கள்......






செவ்வாய், 10 பிப்ரவரி, 2015

பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி இன்று மாலை 5 மணியளவில் மாநிலம் முழுவதும் ஆர்பாட்டம் நடக்கிறது


தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்பாட்டம் நடக்கிறது
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க தமிழ்நாடு சார்பில் இன்று அனைத்து முதன்மைக்கல்வி அலுவலகங்கள் முன்பு பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்பாட்டம் நடைபெறும் இந்த ஆர்பாட்டத்தை மிகச்சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ள அனைத்து மாவட்ட நிர்வாகிகளையும் மாநிலத்தலைமை பாராட்டுகிறது
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்வதாக உறுதியளித்துள்ள தமிழக அரசு உடனடியாக பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்திட்டத்தை நடைமுறை படுத்த வலியுறுத்துதல்
2004 ஆண்டு ஜூலை மாதம் முதல் 31.05.2006 வரையிலான தொகுப்பூதிய காலத்தை முழுப்பணிகாலமாக்கி ஆணை வெளியிட வேண்டுதல்
தற்போது நியமிக்கப்பட்டுள்ள ஓவிய கணினி உடற்கல்வி இசை ஆசிரியர் ஒப்பந்த நியமனங்களை ரத்துசெய்து காலமுறை ஊதியத்திற்கு கொண்டுவர வலியுறுத்துதல்
நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கிட உரிய வழிவகை செய்ய வலியுறுத்துதல்
ஆசிரியர் கலந்தாய்வை ஒழிவு மறைவின்றி நடத்திட வலியுறுத்துதல் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் 1 ம் வகுப்பு  முதல் 5 ம் வகுப்புகள் அடங்கிய தொடக்கப்பள்ளிகள் ஒரு அலகும் 6  முதல் 10  வரை உள்ள பள்ளிகள் அடங்கிய இடைநிலைப்பள்ளிகள் அலகும் 11 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறன் மேம்படும் வகையில் தனி அலகும்   அடங்கிய மூன்று அலகுகளாக பிரிக்க வலியுறுத்துதல்
தற்போது நியமிக்கப்பட்டுள்ள கணினி ஓவியம் உடற்கல்வி இசை ஆசிரியர் ஒப்பந்த நியமனங்களை ரத்து செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டுதல் 
உள்ளிட்ட கோரிக்கைகளை முன்மொழிந்து கோசங்கள் எழுப்ப கேட்டுக்கொள்ளப்படுகிறது

ஒன்றுபடுவோம்! போராடுவோம்!! வெல்வோம் !!!

சனி, 7 பிப்ரவரி, 2015

ஆர்பாட்ட செய்தி......

மீண்டும் மறுமலர்ச்சி......தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலந்தழுவிய ஆர்பாட்டம்...!

நாம் அரசிடம் பெற்றவைகள் உங்கள் கவனத்திற்கு...

  •  தொகுப்பூதிய முறை ரத்து 
  •  அலகு விட்டு அலகு மாறுதல்
  • ஆறாவது ஊதியக்குழுவின் சலுகைகளை 31.05.2009 வரை பெற்று தந்தது
  • பட்டதாரி ஆசிரியர்களுக்கு எம்.பில் ஊக்க ஊதிய உயர்வு நடவடிக்கையை          
  • மாணவர் நலன் கருதி நடமாடும் ஆலோசனை மையத்தை அரசு அமைத்தது
  • 2010 வரை நியமிக்கப்பட்டவர்களுக்கு தகுதித்தேர்வை ரத்து செய்தது  
  • நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வில் ஏற்பட்டுள்ள சிக்கலை கலைந்தது       
 அரசிடம் கோரி பெற இருப்பவை........

  • சட்டமன்ற தேர்தலின் போது அறிவித்தவாறு பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்திட மாநில அரசு உரிய   நடவடிக்கை எடுக்க வேண்டும். 
  • தற்போது நடைமுறையில் இந்த திட்டம் மூலம் அரசு ஊழியர்/ஆசிரியரின் ஊதியத்தின் ஒரு ப குதி பிடித்தம் செய்யப்பட்டு அதற்கு இணையான தொகை அரசின் மூலம் ஊழியரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது இந்நிகழ்வில் சேம நல நிதி எனும் திட்டம் முழுவதுமாக மறுக்கப் பட்டு வருகிறது.  இதன் மூலம் ஒரே பணியை மேற்கொள்ளும் ஊழியரிடையே முரண்பாடு உள்ளது இதனை அரசு உணர்ந்து அனைவருக்கும் பொதுவான ஓய்வூதிய திட்டத்தை நடைமுறை படுத்துவதோடு சேம நல நிதி திட்டத்தை அனைவருக்கும் பொதுமைப் படுத்தும் நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டுகிறோம் .
  •  2004 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டு கடந்த ஆட்சியில் பணிவரன் செய்யப்பட்ட 53,000 ஆசிரியர்களுக்கு  தொகுப்பூதியத்தில் பணியாற்றிய காலத்தை முழுப் பணிக்காலமாக கருதி இந்த நிதி கூட்டத்தொடரில் ஆணை வெளியிட கோருதல்   
  • 2004 ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நியமிக்க பட்டு இதுநாள் வரை முறையான பதவி உயர்வு    வழிமுறையின்றி தவிக்கும்  தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியர் நேரடி நியமன பணியிடங்களில் 50 சதவீதத்தை ஒதுக்கீடு செய்து பதவி உயர்வு வழங்கிட நடவடிக்கை கோருதல் 
  • அனைத்துவகை ஆசிரியர்களுக்கும் மத்திய அரசு ஆசிரியர்களுக்கு  இணையான ஊதியம் வழங்க வேண்டும் 
  • ஒப்பந்த முறையில் நியமிக்கப்பட்டுள்ள பகுதிநேர  உடற்கல்வி , ஓவிய, கணினி, இசை ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கி முழுநேர கற்பித்தல் பணி செய்ய நடவடிக்கை வேண்டுகிறோம்
  •  பொது மாறுதல் வழிகாட்டுதல் நெறிமுறைகளில் அலகு விட்டு அலகு மாறுதல் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தும் இது நாள் வரை  கலந்தாய்வு நடத்தப்படவில்லை என்றாலும் மறைமுகமாக இம்மாறுதல் நடந்துவருவதை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்
  • பள்ளிக்கல்வித்துறையின் தொடக்கக்கல்வி அலகு மற்றும் பள்ளிக்கல்வி அலகில்  புதிய நியமனங்களுக்கு முன்னதாக வெளி மாவட்டங்களில் மாறுதல் பெற வாய்ப்பின்றி பல ஆண்டுகளாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் கலந்தாய்வு நடத்திட தமிழக அரசை கேட்டுக்கொள்ளுதல் 
  • பொது மாறுதல் கலந்தாய்வுகளில் அனைத்து காலிப்பணியிடங்களையும் மறைக்காமல் வெளிப்படையாக இணையத்தில் வெளியிட வேண்டுகிறோம் 
  • தரம் உயர்த்தப்பட்ட 50 பள்ளிகளில் இதுநாள் வழங்கப்படாமல் இருக்கும் ஊதியத்தை வழங்கிட துரித நடவடிக்கை வேண்டுகிறோம் மேலும்  இப்பள்ளிகளில் உடனடியாக தலைமை ஆசிரியர்களை நியமிக்க வேண்டுகிறோம் 
  • நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வில் 36 ழி பணி விதிக்கு தளர்வளிப்பதை தவிர்த்து பட்டதாரி ஆசிரியர்களைக்கொண்டே நியமிக்கப்பட வேண்டும் உதவித்தொடக்கக்கல்வி நேரடி நியமனத்தை தவிர்த்து ஒரே மாதிரியான கல்வித்தகுதியுடன் துறைதேர்வுகளில் தேர்ச்சி பெற்று உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் பணிக்கு தகுதி பெற்றுள்ள பட்டதாரி ஆசிரியர்களைக்கொண்டு  முன்னுரிமைப்பட்டியல் தயாரித்து நிரப்பப்பட வேண்டும். 
  • பங்களிப்பு ஓய்வூதிய நிதியை நிர்வகிக்கப்பதில் தற்போது ஏற்பட்டுள்ள நிர்வாக குளறுபடிகளை தவிர்க்க   முழுக்க அரசு அலுவலர்களையே நியமிக்க வேண்டும் மேலும் இதுநாள் வரை பிடித்தம் செய்யப்பட்ட தொகையினை( றூPய்) சேம நலநிதி போன்று ஊழியர் தனது குறுகிய கால பயன்பாட்டிற்கு பரிவர்த்தனை செய்துகொள்ள உடனடி நடவடிக்கை வேண்டுதல் 
  • பள்ளிக்கல்வித்துறையின் நிர்வாகத்தை மேம்படுத்தும் வகையில் நடுநிலை மூன்று அலகுகளாக பிரித்து இதுநாள் வரை முறைப்படுத்தப்படாத நிர்வாக விதிகளை சீர்திருத்தம் செய்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • பெண்களின் பாதுகாப்பு மட்டும் குடும்ப நலன் கருதி மாலை நேர வகுப்புகளுக்கு பெண் ஆசிரியர்களை கட்டயப்படுத்துவதை  பள்ளிக்கல்வித்துறை  நிர்வாகம் தவிர்க்க வேண்டும் இருக்க வேண்டும் 
  • தேர்ச்சி விகிதம் மட்டுமே குறிக்கோள் என்று ஆசிரியர்களை தூண்டுவதன் மூலம் இயல்பாக நடைபெற வேண்டிய கற்றல் பணி  முழுமை பெற இயலாமல் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை  தவிர்த்து  ஏனையோர் மீது   கவனம் செலுத்த இயலாத சூழல் உள்ளது என்பதை கருத்திற்கொண்டு  மாலை நேர மற்றும் காலை நேர சிறப்பு வகுப்புகளுக்கு  தனியான ஆசிரியர் பணியிடங்களை உருவாக்க வேண்டும்.

                                                                                                                

பிரபலமான இடுகைகள்