
தமிழகத்தில் 320 அரசுப் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 6-ம் வகுப்பு வரை ஆங்கில வழிப் பிரிவுகள் தொடங்க மாநில அரசு உத்தரவிட்டது.
முதல் கட்டமாக, தொடக்கக் கல்வித் துறையில் சென்னை நீங்கலாக 31 மாவட்டங்களில் தலா 5 பள்ளிகள் வீதம் 155 தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி ஜூலை 27-ம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 2-ம் கட்டமாக தற்போது தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களிலும் தலா 5 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் ஆங்கில வழிக் கல்வி தொடங்க தேர்வு செய்யப்பட்டுள்ளன. திருச்சி மாவட்டத்தில் மட்டும் கூடுதலாக 5 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
மொத்தம் 165 பள்ளிகளில் 6-ம் வகுப்பில் இரண்டு ஆங்கில வழிக் கல்வி பிரிவுகள் தொடங்கவும், ஒவ்வொரு பிரிவுக்கும் 35 மாணவர்களைச் சேர்த்துக் கொள்ளவும் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக