வெள்ளி, 10 ஜூலை, 2009

பாபநாசம் ஒன்றியக் கூட்டம்

நாள் : 10-7-2009

நேரம் : மாலை 5 மணி

இடம் : பாபநாசம்

தலைமை : எஸ்.கார்த்திகேயன்

         பாபநாசம் ஒன்றியத் தலைவர்

முன்னிலை :1. த.ஜெயசெல்வன்

         தஞ்சை மாவட்ட பொருளாளர்

         2. ஜோ.ஜூட் அமல் ஜெயராஜ்

         பாபநாசம் ஒன்றியச் செயலாளர்

     3. அ.செந்தில் குமார்

         பாபநாசம் ஒன்றிய பொருளாளர்

கலந்து கொண்டவர்கள்:

பாபநாசம் ஒன்றிய உறுப்பினர்கள் அனைவரும்.

விவாதிக்கப்பட்ட கருத்துக்கள்/கோரிக்கைகள்:

  • அலகு விட்டு அலகு மாறுதலுக்கென ஆணை வழங்கிய மாண்புமிகு.முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பது.
  • பட்டதாரி ஆசிரியர்கள் பயன்பெற ஏதுவாக ஆறாவது ஊதியக்குழுவினை அமல்படுத்த வெளிவந்த ஆணையில் உரிய திருத்தம் செய்து வெளியிட்ட மாண்புமிகு. முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பது.
  • பணியேற்ற நாள்முதல் காலமுறை ஊதியம் பெறுதல்
  • CPS கைவிடப்பட வேண்டும். பழைய ஓய்வூதிய முறை தொடர வேண்டும்.
  • ஆசிரியர் பயிற்றுனராக, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் விருப்பமுள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.
  • பள்ளிகள் அனைத்தும் கிராமப்புற மாணவர்களின் நலன் கருதி காலை 10 மணிக்கு தொடங்க வேண்டும்.
  • தொடக்கக் கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரையும் பள்ளிக்கல்வி சார்நிலைப்பணி விதிகளின் கீழ் கொணர வேண்டும்.
  • உறுப்பினர் சேர்க்கையினை தீவிரப்படுத்துவது.


     


 


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்