செவ்வாய், 20 நவம்பர், 2012
ஞாயிறு, 11 நவம்பர், 2012
புதிதாக 1,591 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் புதிதாக 1,591 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உருவாக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
பள்ளிகளின் தரம் உயர்த்தப்படுவதாலோ, மாணவ, மாணவியர்களுக்கு கல்வி கற்க பல சலுகைகள் வழங்குவதாலோ மட்டும் தரமான கல்வியை மாணவ, மாணவியர்களுக்கு அளிக்க இயலாது; தேவைக்கு ஏற்ப ஆசிரியர்களும் இருக்கவேண்டும் என்பதனை கருத்தில் கொண்டு தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளுக்காக 1,591 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தோற்றுவிக்க முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள். அதனடிப்படையில் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நியமனத்தின் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு 63 கோடியே 94 லட்ச ரூபாய் கூடுதலாக செலவாகும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், 4,393 பள்ளிகளுக்கு ஆய்வக உடனாள் நியமிக்கவும் முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதே போல், 1,764 பள்ளிகளில் இளநிலை உதவியாளர்களை நியமிக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார். 131 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த 152 கோடியே 73 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்தும் முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சனி, 10 நவம்பர், 2012
இருபத்தைந்தாண்டு பணி முடித்த அரசு ஊழியருக்கு ஊக்க தொகை
இருபத்தைந்தாண்டு பணி முடித்த அரசு ஊழியருக்கு ஊக்க தொகை www.tn.gov.in/gosdb/deptorders.php?depid=9
விழா முன்பணம் அரசாணை
விழா முன்பணம் ரூபாய் ஐந்தாயிரமாக உயர்வு அரசாணை
இணைப்பு பதிவிறக்கம் செய்ய....
www.tn.gov.in/gosdb/deptorders.php?depid=9
இணைப்பு பதிவிறக்கம் செய்ய....
www.tn.gov.in/gosdb/deptorders.php?depid=9
சனி, 3 நவம்பர், 2012
ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவு இணையதள இணைப்பு
முடிவுகள் காண இங்கே சுட்டுக.....
http://trb.tn.nic.in/TET2012/02112012/status.asp
http://trb.tn.nic.in/TET2012/02112012/status.asp
வெள்ளி, 2 நவம்பர், 2012
ஆசிரியர் தகுதி மறுதேர்வு: 3% பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்
ஆசிரியர் தகுதி மறுதேர்வில் 3 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆசிரியர் தகுதி மறுதேர்வு எழுதிய 6 லட்சத்து 56 ஆயிரத்து 698 பேரில் 19,246 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
இந்தத் தேர்வு முடிவுகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின்
www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெள்ளிக்கிழமை இரவே வெளியிடப்பட்டன.
தேர்ச்சி பெற்றவர்களுக்கு நவம்பர் 6-ம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது.
முதல் தாளை எழுதிய 2 லட்சத்து 78 ஆயிரத்து 725 பேரில் 10,397 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இரண்டாம் தாளை எழுதிய 3 லட்சத்து 77 ஆயிரத்து 973 பேரில் 8,849 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
முதல் தாளில் 3.7 சதவீதம் பேரும், இரண்டாம் தாளில் 2.3 சதவீதம் பேரும் தேர்ச்சியடைந்துள்ளனர்.
முதல் தாளில் தேர்ச்சி பெற்றவர்கள் மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்களாக நியமிக்கப்படுவர். இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றவர்கள் "வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையில் ஆசிரியர்களாக தேர்ந்தெடுக்கப்படுவர்.
தமிழகம் முழுவதும் சுமார் 7,500 இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் மட்டுமே உள்ளதால், முதல் தாளில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வேலை கிடைப்பது கடினம். தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாநிலப் பதிவு மூப்பின் அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படும்.
அதே நேரத்தில் தமிழகம் முழுவதும் 20,525 பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ளன. எனவே, இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றவர்கள் உரிய தகுதிகளுடன் இருந்தால் அவர்கள் அனைவருக்கும் பணி கிடைக்க வாய்ப்புள்ளது.
ஜூலை மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வை 6.7 லட்சம் பேர் எழுதினர். இதில் 2,448 பேர் மட்டுமே (0.36%) தேர்ச்சி பெற்றிருந்தனர். இதையடுத்து 22 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்காகவும், தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு வாய்ப்பளிக்கவும் ஆசிரியர் தகுதி மறுதேர்வு அக்டோபர் 14-ம் தேதி நடத்தப்பட்டது.
மறுதேர்வில் தேர்வு நேரம் அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த முறை சுமார் 17 ஆயிரம் பேர் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களில் 2,246 பேர் தகுதியுடையவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இடைநிலை ஆசிரியர்களாகவும், பட்டதாரி ஆசிரியர்களாகவும் முதலில் பணி நியமனம் வழங்கப்படும்.
அதன் பிறகே ஆசிரியர் தகுதி மறுதேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
நவம்பர் 6-ல் சான்றிதழ் சரிபார்ப்பு: ஆசிரியர் தகுதி மறுதேர்வில் வெற்றிபெற்ற 19,246 பேருக்கும் நவம்பர் 6-ம் தேதி முதல் அந்தந்த மாவட்டங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும்.
ஒவ்வொரு தேர்வருக்கும் சான்றிதழ் சரிபார்ப்புக்கான அழைப்புக் கடிதம் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்படும். அதில் சான்றிதழ் சரிபார்ப்புக்கான நேரம், இடம் உள்ளிட்ட விவரங்கள் வழங்கப்பட்டிருக்கும். அழைப்புக் கடிதங்கள் தபால் மூலம் அனுப்பப்படாது.
ஒவ்வொரு தேர்வரும் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளை கவனமாகப் படித்து, சான்றிதழ் சரிபார்ப்புக்கான படிவத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். அனைத்து அசல் சான்றிதழ்களையும், அவற்றின் இரண்டு நகல்களையும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு கொண்டுவர வேண்டும்.
முதல் தாளில் வெற்றிபெற்ற தேர்வர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு வரும்போது, அசல் சான்றிதழ்களுடன் புதுப்பிக்கப்பட்ட வேலைவாய்ப்பு பதிவு சான்றிதழ் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரால் சான்றொப்பமிடப்பட்ட பதிவு சான்றிதழின் இரு நகல்கள் ஆகியவற்றை உடன் கொண்டுவர வேண்டும்.
இது தொடர்பாக, வேலைவாய்ப்பு இயக்குநரகம் உரிய உத்தரவுகளை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்களுக்கு வழங்கியுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
ஜூனில்தான் அடுத்த தேர்வு: அடுத்த ஆசிரியர் தகுதி தேர்வு வரும் ஜூன் மாதம்தான் நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. அடுத்ததாக, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி விரிவுரையாளர்கள் நியமனம் உள்ளிட்டப் பணிகளை ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொள்ள உள்ளது.
அதன்பிறகு, ஆசிரியர் தேர்வு வாரியத்தை புதுப்பித்து ஆன்-லைன் வழி விண்ணப்பம் உள்ளிட்ட அம்சங்கள் அறிமுகப்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். எனவே, வரும் ஜூன் மாதத்தில்தான் அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த வாய்ப்புள்ளது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
மீண்டும் தவறுகள்
ஆசிரியர் தகுதி மறுதேர்விலும் விடைத்தாளில் தேர்வர்கள் பல்வேறு தவறுகளைச் செய்துள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, ஆசிரியர் தேர்வு வாரியம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:
வினாத்தாள் எண்ணை விடைத்தாளில் குறிப்பிடாத தேர்வர்களின் விடைத்தாள்கள் மதிப்பிட முடியாது என்பதால் அந்த விடைத்தாள்கள் நிராகரிக்கப்பட்டன. அதேநேரத்தில், வினாத்தாள் எண்ணை எழுதிவிட்டு, அதை விடைத்தாளில் "ஷேட்' செய்யாதவர்களின் விடைத்தாள்கள் பரிசீலிக்கப்பட்டன.
விடைத்தாளில் மொழிப்பாடத்தை குறிப்பிடாதவர்களுக்கு, அவர்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்த மொழிப்பாடத்தின் அடிப்படையில் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டன.
அதேபோல், விருப்பப்பாடத்தை எழுதாமலும், "ஷேட்' செய்யாமலும் விட்டிருந்தவர்களுக்கு, அவர்கள் விண்ணப்பங்களில் குறிப்பிட்ட விருப்பப்பாடத்தின் அடிப்படையில் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
நன்றி தினமணி, சென்னை
வியாழன், 1 நவம்பர், 2012
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றி அலகு விட்டு அலகு மாறுதல் மற்றும் தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றி அரசு உயர்நிலைப்பள்ளிகளில் ஈர்ப்பு செய்யப்பட்ட ஆசிரியர்களின் பங்களிப்பு ஓய்வூதிய திட்ட பணப்பிடித்த நடைமுறை குறித்த விளக்கக்கடிதம்.
இந்நிலையில் தரம் உயர்த்தப்படும் நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றிய ஆசிரியர்களின் தன் பங்கேற்பு ஓய்வூதியத்திட்டத்திற்கு பிடித்தம் செய்வதில் குழப்பம் நிலவி வந்தது .இதனை தெளிவு படுத்தும் பொருட்டு மாநில தலைமைக்கணக்காளர் அவர்களின் விளக்கக்கடிதம் இத்துடன் இடுகையிடப்படுகிறது.
தற்போது பணியாற்றும் பள்ளித்தலைமையாசிரியரின் பரிந்துரையோடு புதிய கணக்கு எண் தொடங்கி அந்த கணக்கு எண்ணுக்கு ஏற்கனவே உள்ள நடைமுறைகளின் படி பிடித்தம் செய்யப்பட்ட தொகைகளை புதிய கணக்கு எண்ணுக்கு மாற்றிக்கொள்ள இந்த வழிகாட்டுதல் நெறிமுறை வழிவகை செய்கிறது
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
பிரபலமான இடுகைகள்
-
மத்திய அரசு ஊழியர்களுக்கான 50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு ...
-
MINIMUM BASIC PAY START AT 18000 MAXIMUM 2.25 LAKHS OVERALL INCREASE IN PAY ALLOWANCES AND PENSION TO BE 23.55% 52 ALLOWANCES ABOLI...
-
த.ஆ.மு.சங்கத்தின் தஞ்சை மாவட்டக் கூட்டம் 27-2-2010 அன்று நடைபெறவுள்ளது. அக்கூட்டத்திற்கு தஞ்சை மாவட்ட பொறுப்பாளர்கள் ,தஞ்சை மாவட்ட...
-
முகப்பு செய்திகள் மாவட்ட செய்திகள் மதுரை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் கருத்துகள் 0 வாசிக்கப்பட்டது 19 பிரதி ...
-
இந்த கல்வி ஆண்டுக்கான உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கான பதவி உயர்வு முன்னுரிமை பட்டியலில் இடம் பெற்றுள்ள ஆசிரியர்களின் விபரத்தை கீழ்க்கண்...