செவ்வாய், 10 பிப்ரவரி, 2015

பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி இன்று மாலை 5 மணியளவில் மாநிலம் முழுவதும் ஆர்பாட்டம் நடக்கிறது


தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்பாட்டம் நடக்கிறது
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க தமிழ்நாடு சார்பில் இன்று அனைத்து முதன்மைக்கல்வி அலுவலகங்கள் முன்பு பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்பாட்டம் நடைபெறும் இந்த ஆர்பாட்டத்தை மிகச்சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ள அனைத்து மாவட்ட நிர்வாகிகளையும் மாநிலத்தலைமை பாராட்டுகிறது
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்வதாக உறுதியளித்துள்ள தமிழக அரசு உடனடியாக பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்திட்டத்தை நடைமுறை படுத்த வலியுறுத்துதல்
2004 ஆண்டு ஜூலை மாதம் முதல் 31.05.2006 வரையிலான தொகுப்பூதிய காலத்தை முழுப்பணிகாலமாக்கி ஆணை வெளியிட வேண்டுதல்
தற்போது நியமிக்கப்பட்டுள்ள ஓவிய கணினி உடற்கல்வி இசை ஆசிரியர் ஒப்பந்த நியமனங்களை ரத்துசெய்து காலமுறை ஊதியத்திற்கு கொண்டுவர வலியுறுத்துதல்
நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கிட உரிய வழிவகை செய்ய வலியுறுத்துதல்
ஆசிரியர் கலந்தாய்வை ஒழிவு மறைவின்றி நடத்திட வலியுறுத்துதல் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் 1 ம் வகுப்பு  முதல் 5 ம் வகுப்புகள் அடங்கிய தொடக்கப்பள்ளிகள் ஒரு அலகும் 6  முதல் 10  வரை உள்ள பள்ளிகள் அடங்கிய இடைநிலைப்பள்ளிகள் அலகும் 11 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறன் மேம்படும் வகையில் தனி அலகும்   அடங்கிய மூன்று அலகுகளாக பிரிக்க வலியுறுத்துதல்
தற்போது நியமிக்கப்பட்டுள்ள கணினி ஓவியம் உடற்கல்வி இசை ஆசிரியர் ஒப்பந்த நியமனங்களை ரத்து செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டுதல் 
உள்ளிட்ட கோரிக்கைகளை முன்மொழிந்து கோசங்கள் எழுப்ப கேட்டுக்கொள்ளப்படுகிறது

ஒன்றுபடுவோம்! போராடுவோம்!! வெல்வோம் !!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்