சனி, 7 பிப்ரவரி, 2015

மீண்டும் மறுமலர்ச்சி......தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலந்தழுவிய ஆர்பாட்டம்...!

நாம் அரசிடம் பெற்றவைகள் உங்கள் கவனத்திற்கு...

  •  தொகுப்பூதிய முறை ரத்து 
  •  அலகு விட்டு அலகு மாறுதல்
  • ஆறாவது ஊதியக்குழுவின் சலுகைகளை 31.05.2009 வரை பெற்று தந்தது
  • பட்டதாரி ஆசிரியர்களுக்கு எம்.பில் ஊக்க ஊதிய உயர்வு நடவடிக்கையை          
  • மாணவர் நலன் கருதி நடமாடும் ஆலோசனை மையத்தை அரசு அமைத்தது
  • 2010 வரை நியமிக்கப்பட்டவர்களுக்கு தகுதித்தேர்வை ரத்து செய்தது  
  • நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வில் ஏற்பட்டுள்ள சிக்கலை கலைந்தது       
 அரசிடம் கோரி பெற இருப்பவை........

  • சட்டமன்ற தேர்தலின் போது அறிவித்தவாறு பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்திட மாநில அரசு உரிய   நடவடிக்கை எடுக்க வேண்டும். 
  • தற்போது நடைமுறையில் இந்த திட்டம் மூலம் அரசு ஊழியர்/ஆசிரியரின் ஊதியத்தின் ஒரு ப குதி பிடித்தம் செய்யப்பட்டு அதற்கு இணையான தொகை அரசின் மூலம் ஊழியரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது இந்நிகழ்வில் சேம நல நிதி எனும் திட்டம் முழுவதுமாக மறுக்கப் பட்டு வருகிறது.  இதன் மூலம் ஒரே பணியை மேற்கொள்ளும் ஊழியரிடையே முரண்பாடு உள்ளது இதனை அரசு உணர்ந்து அனைவருக்கும் பொதுவான ஓய்வூதிய திட்டத்தை நடைமுறை படுத்துவதோடு சேம நல நிதி திட்டத்தை அனைவருக்கும் பொதுமைப் படுத்தும் நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டுகிறோம் .
  •  2004 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டு கடந்த ஆட்சியில் பணிவரன் செய்யப்பட்ட 53,000 ஆசிரியர்களுக்கு  தொகுப்பூதியத்தில் பணியாற்றிய காலத்தை முழுப் பணிக்காலமாக கருதி இந்த நிதி கூட்டத்தொடரில் ஆணை வெளியிட கோருதல்   
  • 2004 ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நியமிக்க பட்டு இதுநாள் வரை முறையான பதவி உயர்வு    வழிமுறையின்றி தவிக்கும்  தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியர் நேரடி நியமன பணியிடங்களில் 50 சதவீதத்தை ஒதுக்கீடு செய்து பதவி உயர்வு வழங்கிட நடவடிக்கை கோருதல் 
  • அனைத்துவகை ஆசிரியர்களுக்கும் மத்திய அரசு ஆசிரியர்களுக்கு  இணையான ஊதியம் வழங்க வேண்டும் 
  • ஒப்பந்த முறையில் நியமிக்கப்பட்டுள்ள பகுதிநேர  உடற்கல்வி , ஓவிய, கணினி, இசை ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கி முழுநேர கற்பித்தல் பணி செய்ய நடவடிக்கை வேண்டுகிறோம்
  •  பொது மாறுதல் வழிகாட்டுதல் நெறிமுறைகளில் அலகு விட்டு அலகு மாறுதல் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தும் இது நாள் வரை  கலந்தாய்வு நடத்தப்படவில்லை என்றாலும் மறைமுகமாக இம்மாறுதல் நடந்துவருவதை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்
  • பள்ளிக்கல்வித்துறையின் தொடக்கக்கல்வி அலகு மற்றும் பள்ளிக்கல்வி அலகில்  புதிய நியமனங்களுக்கு முன்னதாக வெளி மாவட்டங்களில் மாறுதல் பெற வாய்ப்பின்றி பல ஆண்டுகளாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் கலந்தாய்வு நடத்திட தமிழக அரசை கேட்டுக்கொள்ளுதல் 
  • பொது மாறுதல் கலந்தாய்வுகளில் அனைத்து காலிப்பணியிடங்களையும் மறைக்காமல் வெளிப்படையாக இணையத்தில் வெளியிட வேண்டுகிறோம் 
  • தரம் உயர்த்தப்பட்ட 50 பள்ளிகளில் இதுநாள் வழங்கப்படாமல் இருக்கும் ஊதியத்தை வழங்கிட துரித நடவடிக்கை வேண்டுகிறோம் மேலும்  இப்பள்ளிகளில் உடனடியாக தலைமை ஆசிரியர்களை நியமிக்க வேண்டுகிறோம் 
  • நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வில் 36 ழி பணி விதிக்கு தளர்வளிப்பதை தவிர்த்து பட்டதாரி ஆசிரியர்களைக்கொண்டே நியமிக்கப்பட வேண்டும் உதவித்தொடக்கக்கல்வி நேரடி நியமனத்தை தவிர்த்து ஒரே மாதிரியான கல்வித்தகுதியுடன் துறைதேர்வுகளில் தேர்ச்சி பெற்று உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் பணிக்கு தகுதி பெற்றுள்ள பட்டதாரி ஆசிரியர்களைக்கொண்டு  முன்னுரிமைப்பட்டியல் தயாரித்து நிரப்பப்பட வேண்டும். 
  • பங்களிப்பு ஓய்வூதிய நிதியை நிர்வகிக்கப்பதில் தற்போது ஏற்பட்டுள்ள நிர்வாக குளறுபடிகளை தவிர்க்க   முழுக்க அரசு அலுவலர்களையே நியமிக்க வேண்டும் மேலும் இதுநாள் வரை பிடித்தம் செய்யப்பட்ட தொகையினை( றூPய்) சேம நலநிதி போன்று ஊழியர் தனது குறுகிய கால பயன்பாட்டிற்கு பரிவர்த்தனை செய்துகொள்ள உடனடி நடவடிக்கை வேண்டுதல் 
  • பள்ளிக்கல்வித்துறையின் நிர்வாகத்தை மேம்படுத்தும் வகையில் நடுநிலை மூன்று அலகுகளாக பிரித்து இதுநாள் வரை முறைப்படுத்தப்படாத நிர்வாக விதிகளை சீர்திருத்தம் செய்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • பெண்களின் பாதுகாப்பு மட்டும் குடும்ப நலன் கருதி மாலை நேர வகுப்புகளுக்கு பெண் ஆசிரியர்களை கட்டயப்படுத்துவதை  பள்ளிக்கல்வித்துறை  நிர்வாகம் தவிர்க்க வேண்டும் இருக்க வேண்டும் 
  • தேர்ச்சி விகிதம் மட்டுமே குறிக்கோள் என்று ஆசிரியர்களை தூண்டுவதன் மூலம் இயல்பாக நடைபெற வேண்டிய கற்றல் பணி  முழுமை பெற இயலாமல் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை  தவிர்த்து  ஏனையோர் மீது   கவனம் செலுத்த இயலாத சூழல் உள்ளது என்பதை கருத்திற்கொண்டு  மாலை நேர மற்றும் காலை நேர சிறப்பு வகுப்புகளுக்கு  தனியான ஆசிரியர் பணியிடங்களை உருவாக்க வேண்டும்.

                                                                                                                

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்