சனி, 22 செப்டம்பர், 2012

அலகு விட்டு அலகு மாறுதலில் சென்றவர்களுக்கும் தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் விரைவில் பதவி உயர்வு முன்னுரிமை பெற்று தரப்படும்

அலகு விட்டு அலகு மாறுதலில் சென்றவர்களுக்கும் தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் விரைவில் பதவி உயர்வு முன்னுரிமை  பெற்று தரப்படும் .

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில அமைப்பு தொடக்கக்கல்வி மற்றும் பள்ளிக்கல்வி அலகில் பணியாற்றும் அனைத்து வகை ஆசிரியர்களையும் ஒருங்கிணைத்து செயல்பட்டுவரும் ஒரே ஆசிரியர் அமைப்பு என்ற பெருமையோடு மற்ற சகோதர அமைப்புகளோடு இணக்கமான நட்பையும் அதே நேரத்தில் நமது உரிமைகளையும் விட்டுக்கொடா வண்ணம்  தொடர்ந்து இயங்கி வருகிறது.

இதில் நாம் ஏனைய ஆசிரிய நண்பர்களுக்கும் அரசு ஊழியர் பெருமக்களுக்கும் ஏற்பட்ட ஊதிய முரண்பாடு குறிப்பாக அடிப்படை ஊதியத்தோடு  1.86 அளவுக்கு அதிக ஊதிய மடங்கினைப்பெற்றதன் மூலம் 31.05.2009 வரை நியமனம் பெற்ற அனைவரும் இதன் பலனை அடைய நமது சங்கம் மட்டுமே காரணமாக இருந்தது என்பதை பெருமையோடு திரும்பி பார்க்கிறோம்.
அதே நேரத்தில் நமது அடிப்படை கோரிக்கைகளான பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை அரசு கைவிட வேண்டுதல்.
தொகுப்பூதிய காலத்தை பணிக்காலமாக்கிட அரசு உரிய நடவடிக்கை எடுத்தல்.
     தொடரும்......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்