புதன், 25 ஜூலை, 2012

தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பு குறைவும் நியமன விதி குழப்பங்களும்



கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் தொடக்கக்கல்வித்துறையில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டு  அனைவருக்கும் கல்வித்திட்டத்தின் மூலம் நியமிக்கப்பட்ட சுமார் ஐம்பதாயிரம் பட்டதாரி ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பு முழுவதுமாக மறுக்கப்பட்ட நிலையிலையே பணியாற்றி வருகின்றனர். பள்ளிக்கல்வித்துறை நிர்வாக வசதிக்காக இரண்டு அலகுகலாக் பிரிக்கப்பட்டது

அதில் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் அடங்கிய தொடக்கக்கல்வி அலகும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் அடங்கிய பள்ளிக்கல்வி அலகும் ஏற்படுத்தப்பட்டு தனித்தனி இயக்குனரகங்கள் அமைக்கப்பட்டன.இதனைத்தொடர்ந்து இத்துறையின்  உயர் பதவிகளான இயக்குனர்கள் ,இணை இயக்குனர்கள், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள்,மாவட்டக்கல்வி அலுவலர்கள்,மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்கள் ஆகிய பதவி உயர்வுகளுக்கு அடிப்படைத்தகுதியாக உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி மூப்பின் அடிப்படையில் மாவட்ட நிர்வாக அதிகாரிகளாக வரமுடியும் என கல்விப்பணி விதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் என்கிற பணி நிலையில் உள்ள அலுவலர் பள்ளிக்கல்வி அலகில் பணியாற்றும் உயர்நிலைப்பள்ளி அல்லது மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு முன்னுரிமை மூலமாக பதவி உயர்வு பெற்றவராக இருப்பார்.இதில் தொடக்கக்கல்வி அலகின் மாவட்ட நிர்வாக அலுவலரே பள்ளிக்கல்வி அலகிலிருந்து மாற்றுபணியில் நிர்வாக அலுவலராக பணிபுரிய பணிவிதியில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஆனால் தொடக்கக்கல்வி அலகில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பாடவாரியாக பட்டதாரி ஆசிரியர்கள் 2003 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து நியமிக்கப்பட்ட பிறகும் இவர்களுக்கான பதவி உயர்வு வாய்ப்பு உறுதி செய்யப்படவில்லை என்பது ஏற்கனவே உச்சநீதி மன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு முரணாக உள்ளது. தொடக்கக்கல்வி அலகில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர் மேல்நிலைக்கல்வி பணிவிதிகளுக்குட்பட்ட முதுகலை ஆசிரியர் மூதுரிமையை பெற இயலாது.

ஆனால் இடைநிலை பணிவிதிகளுக்குட்பட்டு பணியாற்றும் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு, உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு , வட்டார வளமைய மேற்பார்வையாளர் உள்ளிட்ட பதவி உயர்வுகளை பெற பணிவிதிகளில் இடம் உள்ளது.

தொடக்கக்கல்வி அலகிலும் நேரடி நியமனம் மூலம் நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு வாய்ப்பாக கருதப்படும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வையும் பெற இயலாத நிலையில் பதவி உயர்வு முன்னுரிமையில் நேரடி நியமன பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்ட பிறகும்  அதிக ஊதிய விகிதத்தில் உள்ள பதவியையே எடுத்துக்கொள்ளவேண்டும் 36 a எனும் பணிவிதிக்கு விலக்கு அளித்து விட்டு தொடர்து பழைய நடைமுறையில்  மூதுரிமைபட்டியல் தயாரிக்கப்படுவதால் 2006 க்கும் முன்பு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக இருந்தவர்களே தற்போது வரை நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்று வருகின்றனர்.


தற்போது அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டத்தின் மூலம் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த திட்டம் நிறைவடைவதற்குள் ஒரு சில நடுநிலைப்பள்ளிகளைத் தவிர பெரும்பாலான பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தபட்டுவிடும். தரம் உயர்த்தப்பட்டு பள்ளிக்கல்வி அலகிற்கு ஈர்த்துக்கொள்ளப்படும் நாளின் அடிப்படையிலேயே அந்த பள்ளியில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் பதவி உயர்வு முன்னுரிமை இருக்கும்,இதில் அந்த நடுநிலைப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் தரம் உயர்த்தப்பட்ட அதே உயர்நிலைப்பள்ளியில் இளையவராகவே கருதப்படுகிறார்

.மேலும் இந்த ஆசிரியர் மாறுதல் உள்ளிட்ட நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் போதும் ஈர்ப்பு செய்யப்பட்ட நாளின் அடிப்படையில் அவரது மூதுரிமை நிர்ணயிக்கப்படுகிறது. இவ்வாறு தொடர்ந்து நடுநிலைப்பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு வரும் நிலையில் பெரும்பாலான நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் அரசு உயர்நிலைப்பள்ளிகளுக்கு தொடர்ந்து  ஈர்ப்பு செய்யப்பட்டு வருவதால் இவர்களுக்கான பதவி உயர்வு வாய்ப்பானது நடுநிலைப்பள்ளிகளில் தொடந்து குறைந்து வருவதாலும்,உயர்நிலைப்பள்ளிகளில் ஈர்க்கப்பட்ட தேதியின் அடிப்படையில் இருப்பதாலும் இவர்களது பதவி உயர்வு வாய்ப்பினை நியமன நாள் அல்லது ஆசிரிய தேர்வு வாரிய தர எண் அடிப்படையில் பெற இயலாத நிலையில் உள்ளனர்.


இதில் உரிய விதிமுறைகளை அரசு வகுத்து இந்த நிர்வாக குழப்படிகளை நீக்கி அவரவர் ஆசிரிய தேர்வு வாரிய தர எண் அடிப்படையில் மூதுரிமை பட்டியல் வெளியிட்டு நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் பதவி உயர்வினை அரசு உரிய நடவடிக்கை எடுக்கு என நம்புவோம்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்