பள்ளிக் கல்வித் துறையின் மூத்த அதிகாரிகளில் ஒருவரான அவர், இப்போது மாநிலக் கல்வியியல்
ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். வரும்
திங்கள்கிழமை அவர் புதிய பொறுப்பை ஏற்க உள்ளார்.
திண்டுக்கல் மாவட்ட கல்வி அதிகாரியாக பணியைத் தொடங்கிய அவர், உதகமண்டலம், புதுக்கோட்டை உள்ளிட்ட
மாவட்டங்களில் முதன்மைக் கல்வி அதிகாரியாகப் பணியாற்றியுள்ளார். மெட்ரிக் பள்ளிகள்
இயக்குநரகம், அரசுத் தேர்வுகள் துறை, ஆசிரியர் தேர்வு வாரியம்
போன்றவற்றில் இணை இயக்குநராக இருந்துள்ளார்.
தொடக்கக் கல்வித்
துறை இயக்குநர், மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர்
ஆகிய பொறுப்புகளையும் அவர் வகித்துள்ளார்.
பள்ளிக் கல்வித் துறை இயக்குநராக இருந்த ப. மணி ஜூலை 31-ம் தேதி ஓய்வுபெற்றார்.
இதையடுத்து, புதிய இயக்குநராக திரு.கே.தேவராஜனை
அவர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இவர் அனைத்து ஆசிரிய பெருமக்களிடமும் நன்மதிப்பை பெற்றவர், இவர் தாம் சார்ந்த துறையில்
புதுமைகளை கொண்டு வரும் ஆற்றல் பெற்றவர். இத்தகைய புகழ் மிக்க நற்பெயரோடு இந்த
அலகிலும் முத்திரை பதிக்க தமிழ்நாடு ஆசிரிய முன்னேற்ற சங்கம் வாழ்த்துகிறது....

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக