செவ்வாய், 23 அக்டோபர், 2012

ஆசிரியர் தகுதி மறுதேர்வுக்கான சரியான விடைகள் இணையதளத்தில் வெளியீடு


ஆசிரியர் தகுதி மறுதேர்வு முதல் தாள் மற்றும் இரண்டாம் தாளுக்கான சரியான விடைகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டன.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in  என்ற இணையதளத்தில் இந்த விடைகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த விடைகளில் ஏதேனும் ஆட்சேபம் இருந்தால் அதற்குரிய ஆவணங்களுடன் எழுத்துப்பூர்வமாக ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் சமர்ப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 26) மாலை 5.30 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விடைகள் தொடர்பான ஆட்சேபங்களை தேர்வர்கள் சமர்ப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. சிறுபான்மை மொழிப்பாடங்களுக்கான சரியான விடைகள் மேற்கண்ட இணையதளத்தில் திங்கள்கிழமை (அக்டோபர் 22) வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடைகள் தொடர்பான ஆட்சேபங்களை trb.tnnic.in என்ற இ-மெயில் முகவரியிலும் அனுப்பலாம்.
ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய சுமார் 6 லட்சம் பேரின் விடைத்தாள்கள் ஸ்கேன் செய்து முடிக்கப்பட்டுள்ளன.  ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை விரைவாக வெளியிடுவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஆட்சேபங்களைப் பெற்றவுடன் அவற்றை நிபுணர் குழு கொண்டு ஆய்வு செய்து சரியான விடைகள் இறுதிசெய்யப்படும்.  அதனடிப்படையில் ஆசிரியர் தகுதி மறுதேர்வு விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியல் நாளை வெளியீடு:  மாநிலம் முழுவதும் 2,895  முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர் பணியிடங்களுக்காக கடந்த மே மாதம் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வு விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்ய வேண்டும் எனறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனடிப்படையில், அனைத்து விடைத்தாள்களும் மறுமதிப்பீடு செய்யப்பட்டு மதிப்பெண்களும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இதையடுத்து, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வுப் பட்டியல் திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
பதிவிறக்கம் செய்ய இங்கே சுட்டவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்