செவ்வாய், 14 ஜூலை, 2015

கலந்தாய்வு அரசாணை - மறுபரிசீலனை மாநிலத்தலைவர் அறிக்கை

பள்ளிக்கல்வித்துறை அரசு பொதுமாறுதல் குறித்த நெறிமுறைகள் அரசாணை எண் 232 நாள் 10-07-2015 வெளியிட்டுள்ளது .இதில் வெளியிடப்பட்டுள்ள பல நெறிமுறைகள் ஆசிரியர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது எனில் அது மிகையாகாது.இந்த ஆண்டு முறையான நேர்மையான ஒளிவுமறைவற்ற கலந்தாய்வு நடைபெறுமா எனும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது 

• முதலாவதாக இந்த ஆண்டு கலந்தாய்வு நெறிமுறைகளில் பத்தி 1(3)ல் நூதனமான முறையில்
“கலந்தாய்வுக்கு முன்னர் மானவர்களின் நலன் கருதியும் ஆசிரியர்களின் நலன் கருதியும் பள்ளியின் நலம் கருதியும் தேவையின் அடிப்படையில் நிர்வாக மாறுதல் வழங்கப்படவேண்டும் “ என குறிப்பிடப்பட்டுள்ளது .

பெரும்பான்மையான பணியிடங்களையும் நிர்வாக மாறுதல் அடிப்படையாக நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது .கடந்த காலங்களில் வெளியிடப்பட்ட நெறிமுறைகளில் இந்த வாக்கியங்கள் இல்லாமலே பல்வேறு இடங்கள் நிர்வாக மாறுதல் முறையில் நிரப்பப்பட்டன .தற்போது நேரடியாகவே இவ்வாறு நெறிமுறை வழங்கப்பட்டிருப்பதால் பெரும்பான்மையான பணியிடங்களுமே நிர்வாக மாறுதல் முறையில் நிரப்பப்படுமோ எனும் ஐயமும் இதனால் ஊழல் தலைவிரித்தாடுமோ முறையாக நடைபெறுமோ எனும் சந்தேகம் எழுந்துள்ளது .

• உடனடியாக இந்த நிர்வாக மாறுதல் தொடர்பான பத்தி 1(3) ஐ முழுமையாக நீக்க வேண்டும்.

• கலந்தாய்வு ஆன்லைன் முறையிலா அல்லது எவ்விதம் நடைபெற இருக்கிறது என தெளிவாக குறிப்பிடப்படவில்லை .

* தமிழக ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சீரிய முயற்சியால் பெறப்பட்ட அலகு விட்டு அலகு மாறுதல் முற்றிலுமாக இந்த கல்வி ஆண்டு நிறுத்தப்பட்டிருக்கிறது . பட்டதாரி ஆசிரியர்கள் அலகுவிட்டு அலகு மாறும் முறை ( unit transfer ) ஆண்டுதோறும் ஆசிரியர் தேர்வு வாரிய எண் அடிப்படையில் நடத்தப்பட வேண்டும்

• பொதுமாறுதல் ஓராண்டு பணிக்காலம் முடித்தவர்களுக்கு எனும் முந்தைய நிலையை மாற்றி மூன்றாண்டுகள் நிறைவடைந்தால் தான் மாறுதல் என தன்னிச்சையாக ஆசிரியர் சங்கங்கள் ஆசிரியர்கள் கருத்தை கேட்காமல் நெறிமுறை வெளியிட்டிருப்பது வருந்தத்தக்கது.

• பள்ளிக்கல்வித்துறை இவ்வாண்டு பட்டதாரி ஆசிரியர்கள் பொது மாறுதல் பணிநிரவல் முடிந்த பின்பே செய்யப்படவேண்டும் என நடைமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது ,இந்த பணிநிரவல் மேமாதமே செய்யப்பட்டிருந்தால் ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அவர்களது கல்வி பாதிக்காதவகையில் பள்ளியில் சேர்த்திருக்க இயலும் , தற்போது பணிநிரவல் செய்யப்பட்டால் அது ஆசிரியர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவதோடு அவர்களது குழந்தைகளின் கல்வித்தரத்தையும் பாதிக்கும் என்பதால் இவ்வாண்டு பணிநிரவல் நடவடிக்கையை முழுமையாக கைவிட வேண்டும் .

• ஆசிரியர்கள் மீது எந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் எவ்வித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெளிவு படுத்தியபின்பே அவர்களை நிர்வாக மாறுதல் செய்யவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்