புதன், 22 ஜூலை, 2015

மாறுதல் கலந்தாய்வு அரசாணையில் திருத்தம் செய்ய வலியுறுத்தி ஆசிரியர் முன்னேற்ற சங்கம் ஆர்பாட்டம்



தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் இந்த கல்வியாண்டு வெளியிடப்பட்டுள்ள கலந்தாய்வு அரசாணையில் திருத்தம் வெளியிட வலியுறுத்தி முதல் கட்டமாக வேலூர் , கிருஷ்ணகிரி, தருமபுரி,சேலம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை , சிவகங்கை , இராமநாதபுரம், மதுரை திருநெல்வேலி , கரூர் ஆகிய மாவட்ட  முதன்மைக்கல்வி அலுவலகங்கள்  முன்பு  ஆர்பாட்டம் நடைபெற்றது இதர மாவட்டங்களில் ஜூலை 24 மற்றும் 26 தேதிகளில் நடைபெறுகிறது

இந்த ஆர்பாட்டத்தில் கீழ்கண்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

தற்போது  வெளியிடப்பட்டுள்ள ஆசிரியர் இடமாறுதல் அரசாணை  - 232  ல் திருத்தங்கள்  செய்திட  வலியுறுத்தி கோசங்கள் எழுப்பப்பட்டது
கலந்தாய்விற்கு முன்னதாக மாணவர் ஆசிரியர் பள்ளியின் நலன் கருதியும் தேவையின் அடிப்படையிலும்  நிர்வாக மாறுதல் வழங்கலாம் என்று கூறப்பட்டுள்ளதன் மூலம் முறைகேடுகளுக்கு இடம் கொடுக்கும் வகையிலும் வெளிப்படைத்தன்மைக்கு குந்தகமாகவும் அமையும் என்பதால்  இதனை அரசாணையில் இருந்து நீக்கி நேர்மையான கலந்தாய்வை நடத்திட வேண்டும்.

மூன்றாண்டுகள் ஒரே பள்ளியில் பணி புரிந்தவர்கள் மட்டுமே மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ள முடியும் என்பதை கடந்த ஆண்டுகளில் பின்பற்றியவாறு  ஓராண்டாக மாற்றிட வேண்டும்
.
மே மாதம் நடத்தப்பட வேண்டிய பணி நிரவல் என்பது தற்போது நடத்தப்பட இருப்பதாக அறிவித்திருப்பதன் மூலம் ஆசிரியர் பணிபுரியு

ம் பள்ளி மாணவர்கள் கற்பதில் குழப்பம் ஏற்படுவதோடு ஆசிரியர்களின் குழந்தைகள் குடுப்பத்தாரின் கல்விநிலை மற்றும் இருப்பிட வசதி ஆகியவை நெருக்கடிக்கு உள்ளாகும் சூழல் உள்ளதையும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும் என்பாதை  கருத்திற்கொண்டு இந்தாண்டு பணி நிரவல் கலந்தாய்வை ரத்து செய்திட வேண்டும்.

பட்டதாரி ஆசிரியர்களுக்கு இந்த ஆண்டு கலந்தாய்வை நடத்திட வேண்டும்

இந்தாண்டு அலகு விட்டு அலகு மாறுதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது இதனை திரும்ப பெற்று இந்த ஆண்டு அலகு விட்டு அலகு மாறுதலை நடைமுறை படுத்தவேண்டும்

ஆண்பாலர் மற்றும் பெண்பாலர் பள்ளிகளில் ஆசிரியர்களின் நியமனம் மற்றும் மாறுதல் சார்ந்து தெளிவான நிலையை அரசு எடுக்க வேண்டும்.
என்று கோரிக்கை விடுக்கப்பட்டது



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்