திங்கள், 30 ஜூலை, 2012


ழை மாணவர்களுக்கு 3 நாள் இலவச சுற்றுலா: எஸ்.எஸ்.ஏ. ஏற்பாடு-29-07-2012

எழுத்தின் அளவு :
சென்னை: பொருளாதாரத்தில் பின்தங்கிய, எஸ்.சி., - எஸ்.டி., மற்றும் சிறுபான்மையின (முஸ்லீம்) பிரிவை சேர்ந்த, 8ம் வகுப்பு பயிலும், 9,000 மாணவ, மாணவியர், ரயில் மூலம் இலவசமாக, மூன்று நாள் சுற்றுலா அழைத்து செல்லப்படுகின்றனர்.
அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் புதிய அணுகு முறைகளுக்கான கல்வித் திட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான கல்வி, பெண் கல்வி மற்றும் சிறுபான்மையினக் கல்வி ஆகிய தலைப்புகளின் கீழ், எட்டாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியரை தமிழகத்தின் சிறப்பு மிக்க இடங்களுக்கு அழைத்து செல்ல திட்டமிடப்பட்டது.
இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகத்துடன் இணைந்து, சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதியில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க இடங்களுக்கு, மாணவர்கள் அழைத்துச் செல்லப்படுவர்.
மாநிலம் முழுவதும், 9,000 மாணவ, மாணவியர், 900 பாதுகாவலர்களுடன் சுற்றுலா செல்லவுள்ளனர்.கல்வி சுற்றுலா செல்ல இருக்கும் இடங்கள்:
முதல்நாள்: சென்னை, கிண்டி சிறுவர் பூங்கா, பாம்பு பண்ணை, பிர்லா கோளரங்கம், மாமல்லபுரம், வண்டலூர் உயிரியல் பூங்கா.
இரண்டாம் நாள்: திருச்சி, கல்லணை, முக்கொம்பு, ஸ்ரீரங்கம், மலைக்கோட்டை, அருங்காட்சியகம், தஞ்சை பெரிய கோவில், சரஸ்வதி மஹால்.
மூன்றாம் நாள்: கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறை, காந்தி மண்டபம், குமரி அம்மன் கோவில், கன்னியாகுமரி சர்ச், வட்டக்கோட்டை, திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில், மாவட்ட அறிவியல் பூங்கா, மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருமலை நாயக்கர் மஹால்.
போட்டி: ஒவ்வொரு மாவட்டத்திலும், அனைத்து அரசு நடுநிலைப்பள்ளிகள், ஆதிதிராவிட நலத்துறை, வனத்துறை, சீர்மரபினர் நடுநிலைப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு சிறிய போட்டி நடத்தி, அதன் மூலம் சுற்றலா செல்வோர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி, பாட்டுப்போட்டி மற்றும் நடனப்போட்டி நடத்தப்படும். ஒவ்வொரு போட்டியிலும் முதலிடம் பெறும் மாணவ, மாணவியர், சுற்றுலாவுக்கு தேர்வு செய்யப்படுவர். இதற்கான உத்தரவை அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குனர் முகமது அஸ்லம் பிறப்பித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்