திங்கள், 30 ஜூலை, 2012

முதுகலை ஆசிரியர் நியமனம் மதிப்பெண் கணக்கீடு

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு விரைவில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது என்று கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழகத்தில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் என மொத்தம் 2,895 காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் கடந்த மே 27ம் தேதி நடந்தது.

மாநில அளவில் தமிழ் , 601, ஆங்கிலம் , 349, கணிதம் , 315, இயற்பியல் , 244, வேதியியல் , 222, தாவரவியல் , 204, விலங்கியல் , 197, வரலாறு , 170, புவியியல் , 24, பொருளாதாரம் , 246, வணிகவியல் , 275, அரசியல் அறிவியல் , 4, ஹோம்சயின்ஸ் , 5, இந்தியன் கல்சர் , 1, உடற்கல்வி இயக்குநர் நிலை1 , 36, தெலுங்கு , 1, உருது , 1 என காலி பணியிடங்கள் உள்ளன.

மொத்தம் 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் கடந்த 27ம் தேதி வெளியிடப்பட்டது. தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆகஸ்ட் முதல் வாரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு தொடங்கும் என்று கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ஒரே கட்,ஆப் மதிப்பெண் பெற்று பலரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த மதிப்பெண் 150 என்ற நிலையில் சான்றிதழ் சரிபார்ப்பின்போது வேலைவாய்ப்பு அலுவலக சீனியாரிட்டி, ஆசிரியர் பணி அனுபவம் ஆகியவற்றுக்கு சிறப்பு மதிப்பெண் வழங்கப்பட்டு நேர்காணல் நடத்தப்படும். சீனியாரிட்டி என்பது 1,3 ஆண்டுகள் வரை 1 மதிப்பெண்ணும், 3 முதல் 5 ஆண்டுக்கு 2 மதிப்பெண் ணும், 5 முதல் 10 ஆண்டுகளுக்கு 3 மதிப்பெண்ணும், 10 ஆண்டுகளுக்கு மேல் 4 மதிப்பெண்ணும் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

பணி அனுபவம் என்பது 1 முதல் 2 ஆண்டுகளுக்கு 1 மதிப்பெண்ணும், 2 முதல் 5 ஆண்டுகளுக்கு 2 மதிப்பெண்ணும், 5 ஆண்டுகளுக்கு மேல் 3 மதிப்பெண்ணும் என்று நிர்ணயம் செய்யப்பட் டுள்ளதாகத் தெரிகிறது. சான்றிதழ் சரிபார்ப்பு பற்றிய அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்திலும் கடிதம் மூலமும் தெரிவிக்கப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்