வெள்ளி, 1 மார்ச், 2013


அரசு பள்ளியில் தேசிய அறிவியல் தின கருத்தரங்கம்

வேலாடிப்பட்டி அரசு உயர்நிலை பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் தேசிய அறிவியல் தின விழா கருத்தரங்கம் நடைபெற்றது.
பள்ளி தலைமை ஆசிரியர் சிவக்குமார் தலைமை வகித்தார். அறிவியல் இயக்க மாவட்ட துணைத்தலைவர் மணிகண்டன் முன்னிலை வகித்தார். நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி சர்.சி.வி ராமனின் அரிய கண்டுபிடிப்பான ஒளிச்சிதறல் பற்றி அவர் உலகுக்கு அறிவித்த நாள் பிப்ரவரி 28ம் தேதி என்று கருத்தரங்கில் பேசிய அறிவியல் இயக்க மாவட்ட அமைப்பாளர் முத்துக்குமார் தெரிவித்தார்.இந்திய கண்டுபிடிப்பாளர்களின் சாதனைகள், இந்திய அறிவியல் வரலாற்றில் தமிழர்களின் ஆளுமை பற்றி ஆசிரியர் ரமேஷ்குமார், விண்வெளியில் இந்திய பெண்களின் சாதனைகள் என்ற தலைப்பில் ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில செயற்குழு உறுப்பினர் இளையராஜா ஆகியோர் பேசினர். 
எளிய அறிவியல் பரிசோதனைகள் செய்து காண்பிக்கப்பட்டது.பள்ளி ஆசிரியர்கள் நிர்மல் ராஜ், சுகந்தி, கணேசன், குணசேகரன், மஞ்சுளா, பார்த்தசாரதி, மாரியய்யா, வினோதினி, ஷீபாஹெலினா, கவிப்பிரியா, தேன்மொழி, வெள்ளாளவிடுதி மற்றும் வேலாடிப்பட்டி உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். 
அறிவியல் ஆசிரியர் பெருமாள் வரவேற்றார். ஆங்கில ஆசிரியர் கணேசன் நன்றி கூறினார்.

தினகரன் நாளிதழ் செய்தி                      தினமணி நாளிதழ்செய்தி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்