ஞாயிறு, 15 பிப்ரவரி, 2015

திருநெல்வேலி ஆர்ப்பாட்டம்

நெல்லை ஆர்பாட்டம்
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க கோரிக்கை
கருத்துகள்
0
வாசிக்கப்பட்டது
9
பிரதி
Share
மாற்றம் செய்த நாள்:
வியாழன் , பெப்ரவரி 12,2015, 4:30 AM IST
பதிவு செய்த நாள்:
புதன், பெப்ரவரி 11,2015, 10:27 PM IST
மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வற்புறுத்தி நெல்லையில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
ஆர்ப்பாட்டம்தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தினர் நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
மாவட்ட தலைவர் பாபுவேலன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் சந்திரன் வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர் பிளசிங் பாக்கியராஜ் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கையை வற்புறுத்தி கோஷங்கள் போட்டனர்.
பழைய ஓய்வூதிய திட்டம்இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். 2004–ம் ஆண்டு முதல் 2006–ம் ஆண்டு வரையிலான தொகுப்பூதிய காலத்தை முழுப்பணிக்காலமாக அறிவித்து காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வற்புறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயலாளர் முருகேசன், தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் இயக்குனர் சங்க நிர்வாகி குமாரசேகரன், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க துணை தலைவர் சுரேஷ்குமார், செயற்குழு உறுப்பினர் பழனிக்குமார், ஒன்றிய செயலாளர் எழிலரசன், மகளிர் அணி செயலாளர் வனிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்