கரூர் தினகரன் கரூர், : அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் கோபிநாத் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் நித்தியானந்தன் வரவேற்றார். மாவட்ட துணைத்தலைவர் பிச்சைமுத்து, மகளிரணி அபிராமி, துணைச் செயலாளர் கார்த்திக்கேயன் உட்பட பலர் பேசினர். மாநில பொதுச் செயலாளர் ராஜ்குமார் கலந்து கொண்டு கோரிக்கை குறித்து பேசினார். பிற சார்பு சங்க நிர்வாகிகளான மாசிலாமணி, திருநாவுக்கரசு, செல்வதுரை, திருமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கரூர் மாவட்டத்தில் காலியாக உள்ள டேடா என்ட்ரி ஆபரேட்டர், எம்ஐஎஸ் கோ ஆர்டினேட்டர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை முறைப்படுத்திட வேண்டும். அனைவருக்கும் கல்வி இயக்க பணிகள் தவிர்த்து, கல்வித்துறை சார்ந்த அலுவலகப் பணிகள் செய்யுமாறு நிர்ப்பந்திப்பதை தவிர்க்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
|
ஞாயிறு, 15 பிப்ரவரி, 2015
புதிய ஓய்வூதிய திட்டம் ரத்துகோரி பட்டதாரி ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பிரபலமான இடுகைகள்
-
ஆசிரியர் தகுதி தேர்வுக்கான ரிசல்ட் நேற்று வெளியிடப்பட்டது. 6 லட்சத்து 76 ஆயிரத்து 763 பேர் எழுதிய தேர்வில் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி ப...
-
அன்பு மாணவச் செல்வங்களே, உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள். தேர்வு முடிந்து வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு அடியெடுத்து வை...
-
தமிழ்நாடு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு ஏழு சதவீத அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது இதனைத்தொடந்து கடந்த ஜூலை 2012 மாதம் முதல் க...
-
மதிப்பெண்களைத் தவிர அனைத்துக் கல்விக் கருவிகளையும், உதவிகளையும் தமிழக அரசு "விலையில்லாமல்' வழங்குகிறது. கல்வியை ஊக்குவிப்பதற்க...
-
1.1.2012 ன் படி 2012-13 ம் கல்வியாண்டிற்கான அரசு உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்தோர் முன்னுரிமைப்பட்டியல...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக